By 7 April 2021 0 Comments

உயிர்ப்புப் பெருவிழா அன்றும் இன்றும்!! (கட்டுரை)

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தையும், அதனைக் கொண்டுவரும்சாத்தானையும் அவன் விதைக்கும் மரணத்தையும் தமது வேதனை மிகுந்தபாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் மூலம் சிலுவையின் மகிமையால் வெற்றி கொண்டார்.

வரலாற்றுக் காலத்தில் அடிமைத்தன வாழ்வில் தவித்த இஸ்ராயேல் மக்களின் கூக்குரலைக் கேட்ட இறைவன் அவர்களை அடிமைத்தன வாழ்வில் இருந்து மீட்க மோசேயை அழைத்தார். அவர் வழியாக இஸ்ரயேல் மக்கள் தமது விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தனர்.

விடுதலைப் பயணநூல் 12ஆம் அதிகாரத்தில் இதுவே உங்களுக்கு இவ் ஆண்டின் முதலாம் மாதமாய் இருக்கும்” என இறை தந்தை கூறுகின்றார் “அதாவது எபிரேய மொழியில் அதை ‘நிசாமாசம்’ என அழைப்பர்.

அம் மாதம் பதிநான்காம் திகதிதான் நம் ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே இஸ்ரயேல் மக்கள் பாஸ்காவை எகிப்தில் கொண்டாடினர். பிதாவாகிய இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு கானான் நாட்டை வாக்குறுதி பண்ணினார். கானான் நாட்டிற்கு பயணிப்பதற்கு முன்பு அவர்கள் ஆட்டினை உணவாக உண்ண வேண்டும்.

அதாவது கானான் நாட்டிற்கு செல்வதற்கு பயணத்தின் உணவாக ஆட்டுக்குட்டியை உண்ண வேண்டும். அதை உண்ணவேண்டிய முறையானது ஆட்டின் இரத்தத்தை கதவின் நிலைகளில் பூசி இறைச்சியை நெருப்பில் வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் இடையில் கச்சை கட்டிக்கொண்டு கால்களில் செருப்பை அணிந்து கொண்டு கையில் கோலைப்பிடித்துக்கொண்டு விரைவாக உண்ணவேண்டும். சமைத்தவை அனைத்தையும் முழுமையாக உண்ணும்படியும் மிகுதியான உணவை தீயில்சுட்டெரிக்கும்படியும் கூறியிருந்தார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து அதன்படிசெய்து எகிப்தின் அடிமைத் தளைகளை களைந்து விட்டு வெற்றியோடு கானான் தேசத்தைநோக்கிப் புறப்பட்டனர். ஆண்டவரும் தம்மக்களை இரவில் நெருப்பு தூணாகவும், பகலில் மேகத்தூணாகவும் நின்று அவர்களை வழிநடத்தினார். பகைவர்கள் அவர்களை நெருங்கும் வேளையில் அவர்களுக்கு இருளாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு ஒளியாகவும் இருந்து எகிப்தியர் அவர்களை மேற்கொள்ளா வண்ணம் தமது அரவணைப்பில் பாதுகாத்து வந்தார்.

செங்கடல் அவர்களுக்கு தடையாக இருந்தபோது ஆண்டவர் செங்கடலை இரண்டாகப்பிரித்து உலர்ந்த தரையாக்கி அவர்களை அதன்மீது நடத்திசென்றார். அவர்களை துரத்திவந்த எகிப்தியரை செங்கடலில் மூழ்கச் செய்து நிர்மூலமாக்கினார். எகிப்திலிருந்து புறப்படட்டவர்களில்காலேபும், யோசுவாவும் இறை தந்தைக்கு எதிராக பாவம் செய்யாமல் கீழ்ப்படிந்து வாழ்ந்ததால் ஆண்டவர் வாக்குப் பண்ணின கானான் நாட்டிற்குசென்றார்கள்.

மற்ற அனைவரும் பாலைவனத்திலேயே மரித்துப் போனார்கள். இந்த நிகழ்வுகளை வருடம்தோறும் இஸ்ரயேல் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வந்தனர்.வயதில் மூத்தோர்தாம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டுவந்த பயணத்தின் நிகழ்வுகளைத் தமது பிள்ளைகளுக்கு கதையாகச் சொல்லிக் கொடுப்பது இந்த நிகழ்வின் சிறப்பம்சம் ஆகும். இன்றும் யூதமக்கள் தம் பாஸ்கா விழாவை இவ்வாறே கொண்டாடி வருகின்றார்கள். இதையே நாம் பழைய பாஸ்கா என்றுஅழைக்கின்றோம்.
புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தம்மையே ஒரு ஆட்டுக் குட்டியைப்போல பாஸ்கா பலியாக அர்ப்பணிக்கின்றார். நம்மை பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு பரலோக வான்வீட்டிற்கு கொண்டுசெல்ல ஆண்டவர் இயேசு அவருடைய உடலை நமக்கு உணவாகவும் இரத்தத்தை நமக்கு பானமாகவும் கொடுத்தார். (மத்தேயு26 : 26 – 28)

இவ் உலகம் நமக்கு தற்கலிகமான வீடாக இருக்கின்றது. நாம் அனைவரும் இந்த உலகத்திலிருந்து எம் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இப்பயணத்தின் ஆன்ம உணவாக நம் ஆண்டவர் இயேசு அவரின் உடலையே நமக்கு உணவாக தந்திருக்கின்றார். நாம் ஒவ்வொருநாளும் திருப்பலி வேளையில் ஆண்டவரின் உணவை உடகொள்கினறோம். 1 கொரிந்தியர்11 : 27 -28 “ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே, ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.”

மத்தேயு 15 : 19-20 ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீயஎண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கைகழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது” என்றார்.

நமது உண்மையான மனமாற்றமும் பாவமன்னிப்பின் நிச்சயமுமே வாழ்வை அளிக்கவல்லது என்பது உண்மை. இக்காலத்திலும் பலவித தீயசெயல்கள், நிகழ்வுகள் நம்மிடையே நிகழுவதை நாம் காண்கின்றோம். தூய பவுலடியார் எபேசியார் 6:10-19 அலகையை எதிர்த்து நில்லுங்கள், தீய சக்திகளை முறியடிக்க கடவுள் அருளும் படைக்கலன்களை அணியுங்கள், தூயஆவியின் துணைகொண்டு விழிப்பாக இருங்கள், இறைவனிடம் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் என எம் ஒவ்வொருவருக்கும் ஆணித்தரமாக வலியுறுத்துவதை காண்கிறோம். சங்கீதகாரரான தாவீது அரசன் “என் பாதைக்கு உம்வாக்கே விளக்கு! என்பாதைக்கு ஒளியும்அதுவே!” (திருப்பாடல்119:105) என்கின்றார்.

ஆகவே நாம் ஆண்டவரின் வாக்கில் பற்றுமிக்கவராய் இருப்பதே எம்மைதூய வழிக்கு இட்டுச்செல்கின்றது என இறைவார்த்தை எமக்கு கூறுகின்றது. ஆண்டவரின் உயிர்ப்பின் பெருவிழாவான பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடும் நாங்கள், காலேபும், யோசுவாவும் போன்று இறைத்தந்தை மீதுபற்றுறுதி கொண்டு பழைய பாவ இயல்பை முற்றிலும் களைந்து, புதிய மீட்பின் ஆடையை அணிந்து கொண்டு இறை தந்தைக்கும் எம்அயலவருக்கும் உகந்தவராகவும் எம் அன்றாடவாழ்வின் செயல்களின் அதனை வெளிக்காட்டியும் பிறர் எம்மில் கிறிஸ்துவை காணும் வண்ணம் சாட்சியம் பகிர்வோம் .
அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் நல்வாழ்த்துக்கள்Post a Comment

Protected by WP Anti Spam