பாப்பா ஹெல்த்தியா இருக்கணுமா…!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 54 Second

கர்ப்ப காலம் என்றாலே ஒவ்வொரு செயலையும் யோசித்துத்தான் செய்வோம். ஒவ்வோர் உணவையும் குழந்தையின் நலன் கருதி பார்த்துப் பார்த்துத்தான் உண்போம். ஆனாலும், இனிப்பு என்ற விஷயத்தில் மட்டும் சில கர்ப்பிணிகள் கட்டுப்படுத்த முடியாமல் குழம்பிவிடுவார்கள். ஏனெனில், சாதாரண நாட்களிலேயே நம் விருப்பத்துக்குரியதாக இருக்கும் இனிப்பை கர்ப்ப காலத்தில் மட்டும் திடீரென தவிர்க்க முடியுமா என்பதே சவாலுக்குக் காரணமாகிவிடுகிறது. ஆனால், வேறு வழியில்லை. சர்க்கரையைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது குழந்தையின் நலனைப் பாதிக்கக் கூடும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகிற ஒவ்வாமைகள் மற்றும் ஒவ்வாமை ஆஸ்துமா போன்றவற்றின் பாதிப்புகள் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட சர்க்கரையின் அளவைப் பொறுத்தது என்று European Respiratory Journal-ல் வெளியான பிரிட்டிஷ்ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 8,956 தாய்-குழந்தை ஜோடிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்தப் பெண்கள் கர்ப்ப காலத்தில் உட்கொண்ட சர்க்கரை (பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் இயற்கை சர்க்கரைகளுக்கு மாறான பொருட்கள்) பற்றிய தகவல்களை அளித்துள்ளனர். இவர்களுடைய குழந்தைகளுக்கு 7 வயதில் ஒவ்வாமைகள் மற்றும் தூசிப்பூச்சி, பூனை, புல் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் கர்ப்ப காலத்தில் அதிக சர்க்கரையை உட்கொண்ட 20 சதவிகித தாய்மார்களுடன் குறைந்த அளவு சர்க்கரையை உட்கொண்ட 20 சதவிகித தாய்மார்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் அதிக சர்க்கரையை உட்கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 7 வயதுக்குள் ஒவ்வாமைகள் ஏற்படும் ஆபத்து 38 சதவிகிதம் அதிகமாகவும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வாமைகள் ஏற்படும் ஆபத்து 73 சதவிகிதம் அதிகமாகவும், ஒவ்வாமை ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து 101 சதவிகிதம் அதிகமாகவும் இருந்தது. கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் அதிகளவில் ஃப்ரக்டோஸ் உட்கொள்வது பிரசவத்துக்கு முந்தைய ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சார்ந்த காரணிகளால் குழந்தைகளின் வளரும் நுரையீரலில் ஒவ்வாமை அழற்சி ஏற்பட வழிவகுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, கர்ப்ப காலங்களில் இனிப்பு உணவுகளை கவனமுடன் பயன்படுத்துங்கள். குறிப்பாக, ஆரோக்கியத்துக்காகப் சாப்பிடுகிறேன் என்று பழரசங்களில்(Juice) சர்க்கரையைப் போட்டுக் குடிப்பதை முக்கியமாகத் தவிருங்கள். மேலும் அதிக இனிப்பு கொண்ட பழங்கள், அதிகம் கனிந்த பழங்களையும் தவிர்ப்பது நல்லது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர்ப்புப் பெருவிழா அன்றும் இன்றும்!! (கட்டுரை)
Next post குழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா?!! (மருத்துவம்)