தைரியமும் நம்பிக்கையும்தான் அழகு! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 8 Second

“டிக் டாக் பலருக்கு பெஸ்ட் பிளார்ட்ஃபார்ம். நிறைய பேரை சீரியல், சினிமாவிற்கு அறிமுகம் செய்துள்ளது. தங்கள் திறனை காண்பிப்பதற்கான ஒரு கருவியாக இந்த ஆப்கள் இருந்துள்ளன. என்னையே எடுத்துக் கொண்டால் டிக் டாக் ரெஃப்ரன்ஸில் தான் வந்தேன். அந்த ஆப்பினை சரியான முறையில் பயன்படுத்துபவர்களும் இருக்காங்க. அதை உபயோகிக்க தெரியாமல் வேஸ்ட் செய்றவங்களும் இருக்காங்க” என்கிறார், சன் டிவியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ‘கண்ணான கண்ணே’ தொடர் மூலம் மீராவாக தோழிகள் அனைவரையும் சந்திக்கும் சின்னத்திரை நடிகை நிமிஷ்கா ராதாகிருஷ்ணன்.

“பிறந்து வளர்ந்து, படிப்பெல்லாம் கோவையாக இருந்தாலும் பூர்வீகம் கேரளா. சின்ன வயதிலிருந்தே ஃபேஷன் துறைதான் விருப்பம். ஃபேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டைலிங் செய்வது எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். பள்ளி படிப்பை முடிச்சிட்டு ஃபேஷன் உலகத்துக்குதான் போகணும்னு ஃபேஷன் டிசைனிங்கை கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி காலேஜ்ல படிச்சேன். அங்க படிச்சுட்டு இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக சான்ஸ் கிடைச்சது.

அதை பார்த்து மலையாளத்துல ஒரு சீரியல் நடிக்க கூப்பிட்டாங்க. அதுதான் என் முதல் சீரியல் அனுபவம். அதன் பிறகு தான் சன் டிவியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்பா மகளுக்கு இருக்கும் உறவை வைத்து கதை என்பதால் ஒத்துக்கிட்டேன். காரணம் நான் வீட்டில் ஒரே பொண்ணு. அப்பா செல்லம். அதனாலேயே அந்த கதை பிடித்து போக அந்த சீரியலில் நடிக்க சம்மதித்தேன்’’ என்றவர் தன் சீரியல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

‘‘நான் தொகுப்பாளரா இருந்த போதும் சரி, மலையாள சீரியலில் நடித்த போதும் சரி, மக்கள் மத்தியில் எனக்கு பெரிய அறிமுகம் கிடைக்கல. ஆனால் சன் டிவியில் ‘கண்ணான கண்ணே’ ெதாடரில் நடித்த பிறகு அனைவரும் என்னை மீராவாகவே பார்க்க ஆரம்பித்தனர். மேலும் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சதை நினைக்கும் போது நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள்னு தோணுது.

நான் நடிப்புக்காக எந்தவித ட்ரைனிங் எல்லாம் எடுக்கல. இந்த துறையில் விருப்பம் இருந்ததால், இதில் என்ன இருக்கும் என்பதை பார்க்கணும், எவ்வளவு தூரம் கத்துக்க முடியுமோ அவ்ளோ கத்துக்கணும். அதுக்கு ஏத்த மாதிரியே இயக்குநர் தனுஷ், சுலோக்‌ஷனா அம்மா, பிரித்வி ராஜ் சார், நித்தியா தாஸ் எல்லோரும் இருக்காங்க. அவங்க கிட்ட இருந்து நிறைய விஷயங்களை நான் தினம் தினம் படிக்கிறேன்” என்று கூறும் நிமிஷ்காவின் பேவரைட் நடிகை பிரியங்கா சோப்ராவாம்.

‘‘என்னுடைய ரோல் மாடல் பிரியங்கா சோப்ரா. என்ன படம் நடிச்சாலும் அவங்க பெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. அதே மாதிரி எனக்கும் சின்னத்திரையோ அல்லது வெள்ளித்திரை எதுவாக இருந்தாலும், என்னுடைய பெஸ்ட் தரணும்ன்னு நினைக்கிறேன். எனக்கு திரைப்படங்களில் நடிக்கணும்ன்னு தான் ஆசை. இந்த சீரியல் முடிஞ்சதும், தமிழ் படங்களில் நடிக்க கவனம் செலுத்தலாம்ன்னு இருக்கேன். என்னுடைய பேவரைட் டைரக்டர் கவுதம் மேனன் சார். அவர் படத்தில் நடிக்கணும்” என்று கூறுபவர், இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்னவாக இருக்கிறது என்பது பற்றி பேசினார்.

‘‘நான் எந்நேரமும் சோஷியல் மீடியாக்களில் இயங்குபவள் கிடையாது. ரெகுலரா போஸ்ட் செய்யவும் மாட்டேன். என்னை சுற்றி எப்போதும் போனுடன் உரையாடிக் கொண்டு இருப்பவர்களை பார்க்கும் ேபாது, கவலையா இருக்கு. அதுலேயே மூழ்கி நேரத்தை வீணடிக்கிறாங்க. இதை நேர்மறையா யூஸ் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. ஆனால், அப்படி யூஸ் பண்றோமா என்பது கேள்விக்குறிதான்.

எது கிடைத்தாலும் ரேண்டமா போஸ்ட் பண்றோம். தேவையானது மட்டும் போஸ்ட் பண்ணா எல்லா விஷயத்துக்கும் பயனுள்ளதா இருக்கும். தேவையில்லாதது நிறைய போஸ்ட் பண்ணி எல்லாத்தையும் கஷ்டப்படுத்துறோம். இது இல்லாம பார்த்துக்கிறது நல்லது” என்று கூறும் நிமிஷ்காவிற்கு சமைப்பது, புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகமாம்.

‘‘நடிக்க வந்த பின் நிறைய கற்றுக் கொண்டேன். படிக்கும் போதெல்லாம் வீட்டை சார்ந்து இருந்தோம். வெளியே வந்து பார்க்கும் போது மக்கள் எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்க. எல்லோருடைய கேரக்டர் எப்படி இருக்கு. நம்ம எப்படி நடந்து கொள்ளணும், எந்த இடத்தில் எந்த மாதிரி நாம நடந்துகொள்ளணும், எவ்வளவு பேசணும்னு டீச் பண்ணி கொடுத்திருக்கு. கல்வி பாடம் மட்டும் கற்றுக் கொடுத்திருந்தாலும், வெளியே வந்து பார்த்து எவ்வளவு கத்துக்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையின் முக்கிய பாடமாக நான் பார்க்கிறேன்.

காரணம் நம்மை சுற்றி இருக்கும் உலகத்துடன் நாம் எப்படி வாழ கத்துக்கணும்ன்னு தெரிந்து கொள்வது தான் முக்கியம். இந்த விஷயங்களை கொரோனா இன்னும் ஆழமாக கற்றுக் கொடுத்திருக்கிறது. உணவின் முக்கியத்துவம், குடும்பத்தாரின் அன்பு… என சொல்லிக்கொண்டே போகலாம். எவ்ளோ பேர் சாப்பாடு இல்லாம, காசு இல்லாம, டிராவல் பண்ண முடியாம… கஷ்டப்பட்டாங்க. நம்ம எல்லாத்தையும் மறக்குறது மாதிரி, இதையும் மறக்கக்கூடாது. இது பெரிய பாடம்.

அதேபோல பெண்கள் எல்லா விஷயத்திலயும் நம்பிக்கையோடு தைரியமா இருக்கணும். அந்த தைரியமும், நம்பிக்கையும் தான் அழகு. செல்ஃப் கான்பிடெண்ட்டா இருந்தாலே யாரும் நம்மல உடைக்க முடியாது. அதுக்கு கல்வி ரொம்ப முக்கியம். அது தவறான வழிக்கு நம்மல கூட்டிட்டு போகாமா, பிரச்சினை வந்தாலும், எப்படி எதிர்கொள்ளணும்ன்னு கத்துக் கொடுக்கும்.

நானும் தைரியமா, நம்பிக்கையா இருக்க தினமும் முயற்சி செய்கிறேன். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை ஓவர் கம் பண்ணி வெளியே வரணும். அந்த நேரத்துல நமக்கு பிடித்ததை பண்ணணும். யாரும் நம்மை தட்டிக் கொடுத்து முன்னேற பாதை அமைத்து தரமாட்டாங்க. அது போன்ற வாய்ப்பு ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். நமக்கு ஏற்படும் காயத்திற்கு காரணமும் நாம்தான், அதற்கான மருந்தும் நாம்தான்” என்றார் நிமிஷ்கா ராதாகிருஷ்ணன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்னக் கடலில் பெரிய மீனா இருப்பதும் ஒரு வித சந்தோஷம் தான்! (மகளிர் பக்கம்)
Next post உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? (அவ்வப்போது கிளாமர்)