By 21 June 2021 0 Comments

இ.சி.ஜி.!! (மருத்துவம்)

எத்தனையோ மருத்துவ கண்டுபிடிப்புகளை அறிந்திருப்போம். அவை எல்லாமே மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்களாலேயே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், இ.சி.ஜி. கதையே வேறு! எலக்ட்ரோகார்டியோகிராம் (Electrocardiogram) என்பதன் சுருக்கப் பெயர்தான் இ.சி.ஜி. (ECG).

தமிழில் -இதயத்துடிப்புகளை வரையும் கருவி!

ஆரோக்கியமான ஒருவரின் இதயம்,நிமிடத்துக்கு 60 முதல் 100 பிபிஎம் அளவுக்குத் துடிப்பது உங்களுக்குத் தெரிந்ததே. இந்த இதயத்துடிப்பின் அளவை ஓவியம்போல வரைந்து காட்டுவது என்ற அர்த்தத்திலேயே இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

பரிசோதனைக்கு வந்திருக்கும் நோயாளியின் உடலில் ஆங்காங்கே வயர்களை சொருகி, அதை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்தால், எலெக்ட்ரானிக் திரையில் இதயத்துடிப்புகள் ஏறி இறங்கி விளையாடுவது தெளிவாகத் தெரியும். இதன்மூலம் இதயத் துடிப்பின் எண்ணிக்கையை மட்டுமல்ல…இதயத்தின் நான்கு அறைகளின் அளவு,பேஸ்மேக்கர் போன்ற காரணிகளால்ஏற்பட்டிருக்கும் சேதங்கள் ஆகியவற்றைகண்டுபிடிக்கவும் முடியும்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் மூர்ஹெட் என்பவர்தான் இ.சி.ஜி.யைகண்டுபிடிக்க பிள்ளையார் சுழி போட்டவர். அடிப்படையில் இவர் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர். படித்து முடித்தவுடன், தந்தை நடத்தி வந்த தகவல் தொடர்பு நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்தார். புறாக்களின் வழியாக மெசேஜ் அனுப்பிய காலகட்டத்துக்குப் பிறகு, மின்னணுவடிவத்தில் தகவல்களை அனுப்ப ஆரம்பித்த காலம் அது. அலெக்ஸாண்டரின் தந்தை அதுபோல ஒரு தந்தி அலுவலகத்தை நடத்தி வந்தார்.

இந்தத் தொழிலில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், இதயத்துடிப்புகளை அறியமுடியும் என்ற நம்பிக்கை அலெக்ஸாண்டருக்கு ஏற்பட்டது. 1872ல், காய்ச்சல் நோயாளி ஒருவரின் கையில் வயரை சுற்றி வைத்து இதயத்தின் துடிப்பை அறிந்தார். லண்டன்மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஜான் பர்டன் சாண்டர்சன் என்பவர் இதைக் கண்காணித்தார்.

இதில் முடிவுகள் சாதகமாகக் கிடைத்த பிறகு,லண்டனைச் சேர்ந்த மருத்துவர் அகஸ்டஸ் வாலர், இ.சி.ஜி. பரிசோதனையை இன்னும் ஆழமாகநிகழ்த்தினார். ஒருபக்கம் பெரிதாகவும் அதன் மறுமுனை மெலிதாகவும் உள்ள ஒரு வயரை புரொஜெக்டரில் இணைத்து, இப்பரிசோதனையை செய்தார். இந்த முயற்சியும் வெற்றி பெற்றாலும், பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தக் குறையை 1901ல்,வில்லியம் எந்தோவன் என்றஇந்தோனேஷிய மருத்துவர் சரி செய்தார். இதற்கு முன் நடந்த முயற்சிகளின் அடிப்படையில், ஸ்டிங் கால்வனோமீட்டர் என்ற கருவியை இதனுடன் இணைத்து, இ.சி.ஜி. பரிசோதனையை வெற்றிகரமானதாக மாற்றினார். அடுத்த ஆண்டு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நோபல் பரிசு பெற்ற இந்த மகத்தான கண்டுபிடிப்புதான், இதயம் சம்பந்தமான குறைபாடுகளால் இறப்போரின் எண்ணிக்கையைத் தவிர்க்க, நமக்குப் பெரிதும் உதவுகிறது!நோபல் பரிசு பெற்ற இந்த மகத்தான கண்டுபிடிப்புதான், இதயம் சம்பந்தமான குறைபாடுகளால் இறப்போரின் எண்ணிக்கையை தவிர்க்க, நமக்குப் பெரிதும் உதவுகிறது!Post a Comment

Protected by WP Anti Spam