நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 38 Second

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுப் பழக்கம் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடிய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.

நார்ச்சத்து,பெரும்பாலும் அதிகமாக பழங்களிலும் காய்கறிகளிலும் மற்றும் முழு தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும், அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு தகவல். எனினும் பலநாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post இதயம் செயல் இழந்தால் என்ன செய்வது? (மருத்துவம்)