கொரோனாவை வெல்ல சூரிய ஒளியும் உதவும்!! (மருத்துவம்)
கொரோனா பெருந்தொற்றானது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகளவு உயர்த்துவதற்கு எதை உட்கொள்ள வேண்டும் என அனைவரையுமே சிந்திக்கச் செய்துள்ளது. இயற்கை உணவு ஆதாரங்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை நோக்கி நாம் அனைவருமே திரும்பியிருக்கிறோம். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு வைட்டமின் C, வைட்டமின் D, துத்தநாகம் மற்றும் பல வைட்டமின்களை உள்ளடக்கிய மாத்திரைகள் மிகவும் பொதுவான சிகிச்சைகளாக இருக்கின்றன. இந்நோயை எதிர்த்துப் போரிட முன்தடுப்பு நடவடிக்கைகளாகவும் இவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தடுப்பு நடவடிக்கையில் சூரிய ஒளிக்கும் ஒரு பங்கு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம்… சூரிய ஒளியின் வைட்டமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் D கொரோனாவை எதிர்க்க நமக்கு உதவி செய்யும் திறன் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய ஸ்டீராய்டு ஹார்மோனானான வைட்டமின் டி ஒரு முக்கிய நுண்ஊட்டச்சத்து ஆகும்.
சூரியஒளி நம் உடலில் வைட்டமின் டியினை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வைட்டமின் டியினைப் பெற உங்கள் கைகள், முதுகு மற்றும் அடிவயிற்றை சூரியஒளி படுமாறு செய்யவும். உங்கள் உடல் தயாரிக்கக்கூடிய அதிக வைட்டமின் டியினைப் பெற உங்கள் முதுகை சூரியஒளி படுமாறு செய்யவும். வெளிநாட்டவர்கள் சூரிய குளியல் போடும் ரகசியம் இதுதான்.
வைட்டமின் டி தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோ சனையுடன் அதனை சப்ளிமென்டாக எடுத்துக்கொள்வது கோவிட்-19-ன் தீவிர சிக்கல்களையும், உயிரிழப்பையும் குறைக்கக்கூடும். சூரிய ஒளியிலிருந்து அதிகளவு வைட்டமின் D-ஐ பெறுவதற்கு சிறந்த நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரைக்கும் இடைப்பட்ட நேரமே சரியானது. வைட்டமின் D அதிகமாக இருக்கிற உணவுகளில் முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சியின் மார்புப்பகுதி, சால்மன், மத்தி ஹெர்ரிங் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற எண்ணெய் சத்துமிக்க மீன் வகைகள், காளான்கள், செவ்விறைச்சி, ஈரல் ஆகியவை உள்ளடங்கும்.
கோவிட்-19 சிகிச்சை வசதிகள் போதுமான அளவு இல்லாத பற்றாக்குறை நிலைமையில், இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெச்சரிக்கை மற்றும் முற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதை தவிர வேறு சிறந்த வழி நமக்கு இல்லை. எனவே, தொற்று வராமல் தடுப்பதற்கு அல்லது ஏற்பட்ட தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு போதிய அளவு வைட்டமின் D அளவை நமது உடலில் பராமரிக்க வேண்டியது முக்கியமாகும்.
Average Rating