கொரோனாவைப் போல் கல்லீரல் காக்கவும் தடுப்பூசி உண்டு! (மருத்துவம்)

Read Time:7 Minute, 11 Second

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து எடுத்துக் கொள்வது தவறான ஒன்று. ஏனெனில், மஞ்சள் காமாலை என்பது அறிகுறி மட்டுமே. நோய் அல்ல. ஹெப்படைடிஸ் பாதிப்புக்கு மட்டுமே மஞ்சள் காமாலை ஏற்படுவதில்லை. பித்தப்பையில் கல் இருந்தால், புற்றுநோய் இருந்தால், ஆல்கஹால் மூலமான பாதிப்பு, ரத்தத்தில் ஏதும் பிரச்னை என பல காரணங்களுக்காக மஞ்சள் காமாலை ஏற்படலாம். அதனால், என்ன பிரச்னை என தெரியாமல் மஞ்சள் காமாலைக்கென பொதுவான மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. அது, இன்னும் கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

மனித குலத்துக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது ஹெப்படைடிஸ் எனும் கல்லீரல் வீக்கம். மூன்று முக்கிய காரணங்களால் இந்த நோய் நம்மைத் தாக்குகிறது. ஒன்று, மதுப்பழக்கம், இரண்டாவது கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு மற்றும் மூன்றாவது வைரஸ் கிருமிகள். இந்த மூன்று காரணிகள் மூலமாக கல்லீரல் வீக்கம் எனும் ஹெப்படைட்டிஸ் நோய் தாக்குகிறது.

ஜூலை 28ஆம் தேதியானது உலக ஹெப்படைடிஸ் தினம். இதற்கான ஒரு நாள் முழுக்க ஒதுக்க காரணம் இருக்கிறது. ஹெப்படைடிஸ் விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. உலகளாவிய தரவுபடி ஹெப்படைடிஸ் மூலமாக பாதிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் பேர் இறக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமானது 2030க்குள் இந்த நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காகவே, உலக ஹெப்படைடிஸ் தினம் கொண்டாட வேண்டியது அவசியமாகியிருக்கிறது.

ஹெப்படைடிஸ் வைரஸ் பற்றி முதலில் தெரிந்துகொள்ளலாம். ஹெப்படைடிஸ் ஏ, பி, சி, டி, இ என மொத்தம் ஐந்து வைரஸ் கிருமிகள் இருக்கிறது. ஹெப்படைடிஸ் ஏ – இ இரண்டும் பரவும் முறை ஒரே மாதிரி இருக்கும். அசுத்தமான உணவு – தண்ணீர் மூலமாக பரவக்கூடிய நோய். சாதாரண மஞ்சள் காமாலையாக வந்து போவது பெரும்பாலும் ஹெப்படைடிஸ் ஏ அல்லது இ வைரஸாகதான் இருக்கும். அச்சப்பட வேண்டிய நோய் அல்ல. இதில், ஹெப்படைடிஸ் ஏ தடுக்க தடுப்பூசி இருக்கிறது. ஹெப்படைடிஸ் ‘இ’ வகைக்கு தடுப்பூசி இல்லை.

இந்த இரண்டும் வராமல் தடுக்க நம்மையும், சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே போதும். கைகளைக் கழுவியப் பிறகு சாப்பிடுவது, வெளி உணவுகளைத் தவிர்ப்பது போன்றவையே தடுப்பதற்கான வழியாகும். அடுத்ததாக, ஹெப்படைடிஸ் பி – சி இரண்டும் கொடிய நோய். இந்த கிருமி உடலுக்குள் நீண்ட நாட்களாக தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் கேன்சர் உள்ளிட்ட பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

இந்த இரண்டு வைரஸூம் ஹெச்.ஐ.வி வைரஸைப் போலவே ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியைப் பலர் பயன்படுத்துவது, குறிப்பாக பச்சைக் குத்த பயன்படுத்தும் ஊசிகள், பாதுகாப்பில்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்கு இப்படித்தான் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி பரவுகிறது. அதோடு, நகவெட்டி, சிசர், ஷேவிங் பிளேடு ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தவும் கூடாது.

கல்லீரலின் பெரும்பகுதி பாதிப்பு ஏற்பட்டப் பிறகே ஹெப்படைடிஸ் பி – சி உடலுக்குள் இருப்பதே தெரிய வரும். முன்கூட்டியே கண்டறிந்துவிட்டால் சி வைரஸை மாத்திரை மூலமாகவே குணப்படுத்திவிட முடியும். ஆனால், பி வைரஸை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஹெப்படைடிஸ் பி – சி ஆகியவற்றால் கல்லீரல் மோசமடைந்து சுருக்கம் ஏற்பட்டாலோ, முழுமையாகப் பாதிக்கப்பட்டாலோ கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு. சரி, எப்படி தடுப்பது என்ற கேள்விக்கு முதல் பதில், விழிப்புணர்வு மட்டுமே.

இரண்டாவது, அனைவருமே தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம். கொரோனாவுக்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்வது போலவே, ஹெப்படைடிஸூக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெப்படைடிஸ் பி வைரஸூக்கான தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். கல்லீரலில் கொழுப்பு சேர்வதென்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவான பிரச்னையாகிவிட்டது.

100 பேரில் 30 பேருக்கு கல்லீரலை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், கல்லீரல் கொழுப்பு என்பதை அசாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கல்லீரல் கொழுப்பு வந்தாலும், ஹெப்படைடிஸ் வைரஸ் தாக்கியிருந்தாலும் ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு புரோட்டீன் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். நேரத்துக்கு சாப்பிடுவது, குறைவாக அரிசி உணவுகளை எடுத்துக்கொள்வது, பொரித்த உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதோடு, தினமும் அரைமணிநேர உடற்பயிற்சி செய்தாலே போதும் ஆரோக்கியமாக வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனாவை வெல்ல சூரிய ஒளியும் உதவும்!! (மருத்துவம்)
Next post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)