கண்களும் கவி பாடும்! கூந்தலும் குழலூதும்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 39 Second

வளர்ந்து வரும் சமூக வலைத்தள கலாச்சாரம்… வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்ல வீட்டிலும் இருக்கும் பெண்கள் உட்பட ஒவ்வொருவரும் தங்களை அழகாகவும் பார்ப்பதற்கு பளிச்சென இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாற்றியுள்ளது. ஆணோ – பெண்ணோ அழகாக, ஸ்மார்ட்டாக இருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள். அதிலும் மேக்கப் போடாமலே அந்த அழகு நம்முடன் இருக்கும் என்றால் இன்னமும் ஹேப்பிதான். பேசும் போது முதலில் நாம் ஒருவரின் கண்களைத்தான் பார்க்கிறோம். அடர்த்தியா கண் இமைகள், உடன் நீண்ட கூந்தலும் இணைந்தால் நீங்கள் கூட்டத்தில் தனியாகத் தெரிவீர்கள். ஆசைதான்! ஆனால் என்ன செய்ய… அதற்கெல்லாம் கொடுப்பனை இல்லையே என்னும் உங்கள் மனக்குமுறலுக்கு
டாட்டா சொல்லச் சொல்கிறார் காஸ்மெட்டாலஜி நிபுணர் சுதா ராஜன்.

‘‘காலையிலே எழுந்து கண்ணாடி பார்க்கும் போது மேக்கப்போ டச்சப்போ இல்லாம நம்ம முகம் புத்துணர்ச்சியா இருந்தா யாருக்குதான் பிடிக்காது. அதிலும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் , இப்படி ஓபன் செய்தாலே நோ மேக்கப் செல்ஃபி, ஏர்லி மார்னிங் செல்ஃபி என பெண்கள் ஆர்வம் காட்டும் போது அந்த செல்ஃபிகள் இன்னமும் கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தாலே அழகுதானே. சும்மா முகம் கழுவினாலே நம்ம முகம் பார்க்க பியூட்டி மோட் காட்டினா யார்தான் வேண்டாம் என்பார்கள். இன்றைக்கு இமைகளே இல்லாத கண்கள்ல கூட பார்பி பொம்மை மாதிரி அடர்த்தியா கண் இமைகள் மற்றும் கருமையான அடர்த்தியான அல்லது நீளமான கூந்தலையும் கூட கனப் பொழுதில் வளர்த்துவிட ஐலேஷ் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன்
செய்து கொள்ளலாம்’’ என்கிறார் சுதா ராஜன்.

‘‘கண்களுக்கு கண்மை, மஸ்காரா இதெல்லாம் போடுறதுக்குக் காரணமே இமைகள் அடர்த்தியா தெரியதான். கண்களுடைய வடிவம் கூர்மையாகவும் தனிப்பட்டு தெரிய ஐலைனர் பயன்படுத்துறோம். ஆனால் இந்த காஸ்மெடிக்குகள் இல்லாமலேயே கண் இமைகளை எப்போதும் அடர்த்தியாவும் நீளமாகவும் மாற்றி அமைக்கலாம். அதனை ஐலேஷ் எக்ஸ்டென்ஷன் என்று குறிப்பிடுகிறோம்.

இதில் ஒருவரின் முக அமைப்பு மற்றும் கண்களின் அளவிற்கு ஏற்ப இமைகளை பெரிதுபடுத்திக்கலாம், அடர்த்தியாகவும் மாற்றி அமைக்கலாம். இவ்வாறு ஐலேஷ் பொருத்தும் போது அதை உங்களின் கண்களின் அளவுக்கு ஏற்ப முதலில் அளவு எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு அதை வடிவமைத்து பொருத்துவோம். சிலருக்கு கண்கள் ரொம்ப சின்னதா இருக்கும் அதில் மேற்கொண்டு இமைகளை அதிகப்படுத்தினால், இன்னும் சின்னதா தெரியும். இதையெல்லாம் சோதனை செய்துதான் இமைகள் பொருத்துவோம்’’ என்றவர் அதன் வகைகளைப் பற்றி விவரித்தார்.

‘‘இதனை கிளாசிக், ஹைபிரிட், வால்யூம், மற்றும் எக்ஸ்ட்ரீம் வால்யூம் என நான்கு வகையாக பிரித்திருக்கிறோம். இமைகளே இல்லன்னு வர்றவங்களுக்கு கிளாசிக். காரணம் எடுத்த உடனே அதிக அடர்த்தி கொடுத்தா இவ்வளவு நாட்கள் இமைகளே இல்லாமல் இருந்திருப்பாங்க. திடீரென்று அடர்த்தியா மாற்றினால் வித்தியாசமாக இருக்கும். அவ்வாறு தெரியாமல் இருக்க கிளாசிக். மேலும் சிலர் கண்களை அதிகம் தேய்ப்பாங்க, இழுப்பாங்க, அவங்களுக்கெல்லாம் கிளாசிக்தான் சரி. அடுத்து கொஞ்சம் ஹைடெக் ஸ்டைல் வேணும்னு நினைக்கறவங்க ஹைபிரிட் போகலாம். சிலர் அப்படியே மேக்கப் ஸ்டைல் இமைகள் கேட்பாங்க, அவங்களுக்கு பார்பி பொம்மை மாதிரி வடிவமைக்கலாம். கண்கள் முழுதும் வைக்காமல் ஓரத்திலே மட்டும் றெக்கை மாதிரி இமைகள் வைக்கலாம். ஐலேஷ் பொறுத்தவரை வால்யூம் மற்றும் எக்ஸ்ட்ரா வால்யூம் வகையில் நாம் விரும்பும் ஸ்டைல் ெகாண்டு வரமுடியும். இதற்கு ஒரே ரூல்தான். கண்களை தேய்க்கக் கூடாது. எண்ணெய் பயன்படுத்தக் கூடாது, மஸ்காராவும் தேவையில்லை.

இதே ரூல்தான் முடிக்கும். நோ ஆயில், ரொம்ப கடினமா சீவக் கூடாது. இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன் அழகுக்கு வைக்கிறவங்களைக் காட்டிலும் கேன்சரால் பாதிக்கப்பட்டு முடி இழந்தவங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். அவங்களுக்கு வேர்ல இருந்து துவங்கியே முடியினை பொருத்துவோம். சிலருக்கு ரொம்ப உடைஞ்சு, முடி வறண்டு சுத்தமா அவங்களால எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். அவங்க முடியும் எக்ஸ்டென்ஷன் முறையிலே நீளமாகவும், அடர்த்தியாவும் மற்றும் மென்மையா மாத்திடலாம். இமைகள், முடி ரெண்டுமே அவரவரின் பயன்பாடு பொருத்து 6 முதல் 8 வாரங்கள் அப்படியே இருக்கும்’’ என்றார் சுதா ராஜன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆளுமைப் பெண்கள்! (மகளிர் பக்கம்)