அனைத்து முதுகுவலிக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை!! (மருத்துவம்)
பெரும்பாலான நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மூலம் முதுகுவலி குறைகிறது மற்றும் குணமாகிறது. முதுகு தண்டை வலுப்படுத்தும் பயிற்சிகள் முதுகு வலி குறைவதற்கான முக்கிய சிகிச்சையாகும். அடிவயிற்று தசைகள், முதுகு தசைகள் மற்றும் கால்களின் தசைகளில் வலிமை இல்லாத காரணத்தாலும் முதுகு வலி ஏற்படுகிறது. எனவே முதுகு வலி உள்ள நோயாளிகள் மேலும் அது அதிகரிக்காமல் தடுக்க காயமடைந்த கட்டமைப்புகளை குணப்படுத்த தசைகளை வலுப்படுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை முதுகு வலிக்கு உடற்பயிற்சி மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.
காயம் அல்லது அதிர்ச்சி, உடல் பருமன், அசாதாரண தோரணையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, நீண்ட நேர பயணம், மன அழுத்தம், வேலையில் அதிருப்தி அல்லது கடுமையான உடற்பயிற்சி மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகிய காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகுவலி என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் அது உடலில் ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பாகும்.
வட்டு இறக்கம், நரம்பு வேர் சுருக்கம், முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, முதுகெலும்பு முறிவு, எலும்பு சிதைவு, கீல்வாதம், அரிதான தொற்றுகள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின காரணமாக முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படுகிறது. சிலருக்கு கடுமையான முதுகு வலி மற்றும் சிலர் வெறும் காலுடன் நடக்கும்போது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு மற்றும் நீண்ட நாள் ஒருவர் படுக்கையில் இருப்பதால் ஏற்படும் முதுகுவலி போன்றவற்றிற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை.
அவர்களின் முதுகு வலி மற்றும் கால்வலி குணமாக முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, சரியான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதோடு முதுகு தண்டை வலுப்படுத்துவதற்காக 2 மாத பிசியோதெரபி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதோடு சில வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதும். இந்த முதுகு வலியானது சரியாகி விடும். 2 வார காலத்திற்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியான வலி குறைந்த பிறகு முதுகுவலியின் காரணத்தைக் கண்டறிய முழுமையான மருத்துவ நரம்பியல் பரிசோதனை செய்யலாம்.
முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, கட்டி, கால்கள் அல்லது காலில் பலவீனம், மலக்குடல் பிரச்சினை, சிறுநீர் மற்றும் மலம் அடங்காமை, ஆசனவாய் பகுதியில் உணர்திறன் குறைதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே முதுகு வலி உள்ள 10-ல் 9 பேருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. அவர்களுக்கு வலி நிவாரணிகளும் உடற்பயிற்சியுமே போதுமானதாகும்.
Average Rating