Empty nest syndrome: முதியோரே கவனம் அவசியம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 4 Second

இந்தியாவில் சுமார் 9% மூத்தோர் தனிமையில் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?! கவர்ச்சிகரமான வேலைகளின் காரணமாக பிள்ளைகள் இடம்பெயர்வது கூட்டு குடும்பங்களை தனிக்குடும்பங்களாக குறைப்பதற்கான முக்கிய காரணியாக உள்ளது. நட்சத்திர வசதிகளுடன் கூடிய பெற்றோர் இல்லங்களின் அதிகரிப்பு இதற்கு நல்ல உதாரணமாக உள்ளது.

இது வயதானவர்களிடையே மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு முக்கிய காரணமான Empty nest syndrome என்ற காலிக்கூடு நோய்க்குறிக்கு மேலும் பங்களித்துள்ளது. 85 வயதுக்கு மேல் இதன் தீவிரம் இரட்டிப்பாகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதலீடாக வைத்துள்ளார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களை நன்றாக வளர்ப்பதில் அவர்களின் வாழ்க்கை சுழல்கிறது. அவர்களது வெற்றிக்கு தாங்கள் கருவியாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள்.

குழந்தைகள் சுயாதீனமான தனிநபர்களாக மலர்கிறார்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையை மேற்கொண்டு நடத்துகிறார்கள். நேர்மறையான காரணங்களால் கூட, குழந்தைகளின் வாழ்க்கையில் அவர்களின் பங்கை இழப்பது அவர்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறுதான் காலிக் கூடு நோய்க்குறி பிறக்கிறது.

ஒரு சில வாரங்களுக்கு மேல் நீடிக்கும் பல உணர்வுகளை பெற்றோரில் ஒருவர் அனுபவிக்கும் போது, அது மனச்சோர்வின் அறிகுறியாகும். தங்கள் சொந்த விருப்பங்களைத் தொடரவோ அல்லது கலாச்சார அல்லது சமூக உறவுகளை வளர்க்கவோ நேரம் ஒதுக்காத பெற்றோர்களிடையே காலிக் கூடு நோய்க்குறியின் தாக்கம் அதிகமாகக் காணப் படுகிறது. ஆண்களை விட பெண்கள் காலிக் கூடு நோய்க்குறி மற்றும் மனச்சோர்வை அதிகமாக அனுபவிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இது மூத்தோரிடையே தேக்கநிலை, நலிந்தநிலை மற்றும் ஒட்டுமொத்த நிச்சயமற்ற உணர்வை உறுதி செய்துள்ளது. திரும்பவும் இது மன உளைச்சல் மற்றும் தற்கொலை மரணங்கள் போன்ற சரிவுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு சமூகமாக, நாம், இந்த நோக்கத்திற்காக ஒருமனதாக நமது ஆதரவை வழங்க வேண்டும்.

பாதுகாப்பு காரணிகளை முன் வைப்பதை உறுதி செய்வது தற்கொலையின் அபாயத்தைக் குறைப்பதில் உதவியாக இருக்கும். தொழில்முறை உதவியை நாடுவது ஒரு விலக்கப்பட்ட செயல் அல்ல என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

முதியோரைக் காக்க என்ன செய்வது?

மன மற்றும் உடல் பிரச்னைகளுக்கு தடுப்பு சிகிச்சை, சமூக இணைப்பை உறுதி செய்தல், சமாளிக்கும் திறன் மற்றும் தகவமைப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுதல், நெருக்கடியான சமயங்களில் பொருத்தமாக பதில் வினையாற்றுதல், சமூக உறவுகள் மற்றும் நம்பிக்கை முறைமைகளை வலுப்படுத்துதல் என இந்த 5 வழிமுறைகளும் முதியோரைப் பாதுகாக்க அவசியமாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்!! ( மகளிர் பக்கம்)
Next post வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்!! (மருத்துவம்)