மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்

Read Time:1 Minute, 24 Second

Claymore_5.gif

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மடு உயிலங்குளம் பகுதியிலிருந்து மடு தேவாலயம் நோக்கிய திசையில் பயணித்த உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வீரவேங்கை கயல்வெற்றி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகவும் வெள்ளாங்குளம் சந்தியை தற்காலிக முகவரியாக கொண்ட மருதலிங்கம் சிவலிங்கம் என்ற போராளி வீரச்சாவடைதுள்ளதுடன், மன்னார் முட்கொம்பனைச் சேர்ந்த செல்லத்துரை விஜயபாலன் (வயது 22) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி என்று மன்னார் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நோர்வே புலிகளைத் தடைசெய்யவேண்டும் – பாதிக்கப்பட்ட நோர்வே தமிழர்
Next post கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி