கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி

Read Time:1 Minute, 0 Second

jaffana-map.gif
யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.

கொக்குவிலிலிருந்து ஆனைக்கோட்டை நோக்கி, நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் சுற்றுக்காவல் அணியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தியதாக யாழ். தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்
Next post திருமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை