உடல் வீக்கமா..? உடனே கவனியுங்கள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 3 Second

‘‘பூச்சிகள் கடித்தால் ஏற்படும் வீக்கம்போல், காரணம் எதுவும் இல்லாமல் குழந்தைகளின் உடலில் வீக்கம் தோன்றினால் அது குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் சத்துக்குறைபாடு என்று எச்சரிக்கையாகி விட வேண்டும்” என அக்கறையோடு பேசத் தொடங்குகிறார் குழந்தைகள் நல மருத்துவரான மாதுரி பிரபு.

சத்துக்குறைபாட்டுக்கான காரணங்கள், தவிர்க்கும் முறைகள் பற்றித் தொடர்ந்து நம்மிடம் கூறியதிலிருந்து… புரதம், வைட்டமின் போன்ற சத்துக்குறைபாடுகளால் குழந்தைகளுக்கு உடலில் திடீர் வீக்கம் ஏற்படுகிறது. சில குழந்தை
களுக்கு மரபியல் காரணங்களாலும் இந்த வீக்கம் ஏற்படலாம். இத்துடன் குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Weaning Time என்று சொல்லப்படுகிற 6 மாதத்தில் தாய்ப்பாலோடு நன்றாக வேகவைத்த பருப்பு, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் என மற்ற உணவு வகைகளையும் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் சத்துள்ள எல்லா உணவு வகைகளையும் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சில இளம்தாய்மார்கள் 9 மாதங்கள் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவிட்டு, அதன் பின்னர்தான் பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, பழ வகைகள் போன்ற உணவுகளை கொடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் சுவையை உணர ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் தின்பண்டங்களைத்தான் விரும்புவார்கள்;

சத்துள்ள உணவுகளின் மீது ஆர்வம் இருக்காது. இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே நல்ல உணவுப்பழக்கத்தை உண்டாக்க வேண்டும். அதற்காக, வலுக்கட்டாயமாக குழந்தையின் கை, கால்களைப் பிடித்துக்கொண்டு சோறு ஊட்டுவதும் தவறான அணுகுமுறை. குழந்தை அழுதவாறு சாப்பிட்டாலும் சத்துக்கள் குழந்தையின் உடலில் முழுமையாகச் சேராது. தவிர, ஆரோக்கியம், சீரான வளர்ச்சி போன்றவற்றுக்காக தரப்படும் உணவு குழந்தையின் உடலில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

புரதச்சத்து குறைவால் ஏற்படுகிற உடல் வீக்கத்தைக் கருவிலேயே கண்டுபிடிக்கலாம். இதில் Mild, Moderate, Severe என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் மிதமான நிலையாக இருந்தால் உடல் எடை குறையும். இதனை எளிதில் குணப்படுத்தி விடலாம். Moderate நிலையில் முடியின் நிறம் மாறுவதுடன், சருமப் பகுதியும் வீக்கம் அடையும். இதற்கு சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும்.

உடல் வீக்கம் முற்றிய நிலையில் இருந்தால் வருடக்கணக்கில் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், இந்த அளவு பாதிப்பு களுக்குச் செல்லாமல் 7 மாதத்தில் இருந்து சத்துள்ள உணவு வகைகளை கொடுக்க முயற்சிக்க வேண்டும். இதனுடன் தடுப்பு ஊசிகளையும் தவறாமல் போட்டு வர வேண்டும்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்!! (மகளிர் பக்கம்)
Next post பேபி புராடெக்ட்ஸ்!! (மருத்துவம்)