வேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 14 Second

ஜோரா ஜாப்ஸ் (Jora Jobs)

ஜோரா ஜாப்ஸ், ஒரு நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் ஆப். நிறுவனங்கள் தங்களின் தேவைகளை ஆப்பில் பதிவு செய்வதால், நேரடியாக அவரவரின் திறமைக்கு ஏற்ப என்ன வேலை என்று தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கான வேலைக் கிடைத்து விட்டாலும் ஜோரா ஜாப்ஸ் மூலம் வேலைக்கான மார்க்கெட் நிலவரம் என்ன என்று அவ்வப்போது தெரிந்துக் கொள்ளலாம். மிகவும் எளிது மற்றும் வேகமாக நாம் விரும்பும் வேலையை தேட உதவுவதில் ஜோரா ஜாப்ஸ் சிறந்தது. இந்த ஆப்பில் நிறுவனத்தின் பெயர், சம்பளம் மற்றும் தகுதிக்கேற்ற வேலை பற்றி குறிப்பிட்டும் நமக்கான வேலையை தேடலாம். அது மட்டும் இல்லாமல் முழு நேர மற்றும் பகுதி நேர வேலை எதுவாக இருந்தாலும் நம்முடைய வசதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். புதிய வேலைகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகும் என்பதால் மார்க்கெட்டில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி தெரிந்துக் கொள்ள மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இந்த ஆப்பினை உங்களின் செல்போனில் டவுண்லோட் செய்தால் போதும். அதன் பிறகு வேலைகள் குறித்த தகவல்களை நாம் அன்றாடம் தெரிந்துக் கொள்ளலாம்.

இண்டீட் ஜாப் சர்ச் (Indeed Job Search)

இண்டீட் ஆப், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள லட்சக் கணக்கான வேலைகள் பற்றி தெரிந்துக் கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நாளும் புது வேலைகள் குறித்த விவரங்களும் இதில் மேம்படுத்தப்படுகிறது. 28 மொழிகளில் 60 நாடுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன என்பதை குறித்த விவரங்களும் இதில் பதிவு செய்யப்படுகிறது. ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்தால் போதும். அதன் பிறகு நிறுவனங்கள் மற்றும் அதில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வேலைகளை உங்களின் தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். ஆப் மூலம் நேரடியாகவே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமில்லை, இண்டீட்டில் உங்களுக்கான தனி கணக்கினை துவங்கி அதில் விருப்பமான வேலைகள் குறித்து பதிவு செய்யும் வசதியும் உள்ளது. உங்களின் விருப்பமான நிறுவனங்கள் பற்றி தெரிந்துக் கொள்வது மட்டுமில்லாமல் புதிய வேலைக்கான குறிப்புகளும் அவ்வப்போது இதில் வெளியாகும்.

கிளாஸ்டோர் (Glassdoor)

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும், வேலை வாய்ப்பு, நிறுவனத்தின் முழு நிலவரம் என அனைத்து செய்திகளையும் இந்த ஆப் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இதில் ஐந்து முக்கிய அம்சங்கள்
உள்ளன…

* ஒருவரின் தகுதிக்கு ஏற்ப அவருக்கு என்ன வேலை உள்ளது என்பதை தானாகவே இந்த ஆப் மூலம் வரிசைப்படுத்தப்படும். அதைக் கொண்டு அவர்களுக்கான வேலையை அவர்கள் தேடிக் கொள்ளலாம்.
* ஒரு நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பிக்கும் போது, அந்த நிறுவனம் குறித்த முழு விவரங்களை தெரிந்துக் கொள்வது அவசியம். அதுவும் குறிப்பாக அங்கு வேலைப் பார்ப்பவர்களின் கருத்துகள் மூலம், அந்த நிறுவனம் குறித்த உண்மையான தகவல்களை தெரிந்துக் கொண்டு பிறகு விண்ணப்பிக்கலாம்.
* உங்களுக்கு பிடித்த வேலையை தேர்வு செய்து, பிறகு விண்ணப்பிக்கலாம். அல்லது உங்கள் கைபேசியில் உள்ள ஆப் மூலம் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
* நேர்காணலில் என்ன மாதிரியான கேள்விகள் எழும் என்பது பற்றிய விவரங்கள் இதில் உள்ளன. அதைக் கொண்டு உங்களுக்கான கேள்விகள் மற்றும் அதற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்று உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்.
* புதிய நிறுவனங்கள் மற்றும் வேலைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரிமாறப்படும்.

டிரோவிட் ஜாப்ஸ் (Trovit Jobs)

டிரோவிட் ஜாப்ஸ் பல இணையத் தளங்களில் உள்ள வேலைவாய்ப்பினை ஒன்றாக இணைக்கும் ஆப். இதன் மூலம் உங்களின் கனவு வேலை எங்கு மறைந்து இருந்தாலும் உங்களின் பார்வையை விட்டு அகலாது.

* எல்லாருக்கும் எல்லா வேலையும் செட்டாகாது. உங்களின் தேவைக்கு ஏற்ப நீங்கள் உங்களின் வேலையை தேர்வு செய்ய வேண்டும். விருப்பத்திற்கு ஏற்ப தேவைகளை பதிவு செய்தால், அதற்கான வேலை குறித்த விவரங்களை டிரோவிட் உங்களுக்கு அளிக்கும்.
* ஒரு முறை வேலைக் குறித்த செய்திகளை பார்த்து இருப்பீர்கள், பிறகு விண்ணப்பிக்கலாம் என்று விட்டு இருப்பீர்கள். ஆனால் மறுபடியும் பார்க்கும் போது அந்த வேலைப் பற்றிய குறிப்பு உங்களுக்கு இருக்காது. இந்த பிரச்னை இனி இல்லை. வேலை குறித்த செய்தியினை சேகரித்து வைக்கலாம். ஒரு வேளை ஆப்பினை தவறுதலாக கைபேசியில் இருந்து நீக்கம் ெசய்துவிட்டால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய குறிப்பு அப்படியேதான் இருக்கும்.
* ஒரு முறை டிரோவிட்டில் பதிவு செய்துவிட்டால் போதும், எப்போது எல்லாம் புது வேலைக் குறித்த செய்திகள் வெளியாகிறதோ அது குறித்து உங்களுக்கு அறிவிப்பு வரும். இதில் 1000த்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு குறித்த இணையதளங்கள் இணைந்திருப்பதால், ஒவ்வொரு நிமிடமும் புதிய வேலைகள் பற்றிய செய்திகளை தெரிவிக்கப்படும்.
* டிரோவிட்டில் வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபம். உங்களுக்கான வேலையை முதலில் தேடுங்கள் பிறகு தேர்வு செய்யுங்கள். அதன் பிறகு விண்ணப்பியுங்கள். ஒரு முறை விண்ணப்பித்தால் அடுத்த வேலை பற்றி செய்திகள் உங்களுக்கு தெரிவிக்கப்படாது என்பதில்லை. அவ்வப்போது, வெளியாகும் புதிய வேலைகள் பற்றிய செய்திகள் பற்றிய விவரங்கள் குறித்த எச்சரிக்கை வந்து கொண்டு இருக்கும்.
* இந்தியா மட்டுமில்லை 46 மேலைநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளும் இதில் இருப்பதால், அவரவர் தகுதிக்கேற்ற வேலையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

மிடுலா ஜாப்ஸ் (Mitula Jobs)

ஒவ்வொரு இணையமாக சென்று வேலையை தேடி களைத்து விட்டீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். உங்களுக்கான வேலையை எல்லா இணையத்தில் இருந்தும் மிடுலா தேர்வு செய்து தரும். ஆசிரியர், மெக்கானிக், பிளம்பர், நர்ஸ், வெப் டெவலெப்பர், சைக்கோதெரபிஸ்ட், டாக்டர்… என அனைத்து ரக வேலைக்கான வாய்ப்புகள் குறித்த செய்திகள் மிடுலாவில் உள்ளது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்பு குறித்தும் மிடுலாவில் வெளியிடப்படுவதால் அவரவரின் தேவை மற்றும் திறமைக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்துக் கொள்ளலாம். உங்களுக்கான ஒரு கணக்கினை துவங்கி அதில் விரும்பும் வேலை குறித்த செய்தியை சேமிக்கலாம். சுயவிவரத்திற்கு ஏற்ப வேலை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். சில வேலைகள் உங்களுக்கு உகந்ததாக இருக்காது, அந்த சமயத்தில் அது குறித்த செய்திகள் மற்றும் விளம்பரங்களை உங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பகிரலாம். மிடுலா ஜாப்சை டவுண்லோட் செய்யுங்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரம்பரிய உணவுகளில் பணம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post டீம் வொர்க்… ட்ரீம் வொர்க்!! (மருத்துவம்)