ஆரோக்கியமான முறையில் நூடுல்ஸ் சமைக்க என்ன வழி? (மருத்துவம்)

Read Time:1 Minute, 51 Second

நூடுல்ஸை தவிர வேறு எதையும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை எப்படித்தான் மாற்றுவது? ஆரோக்கியமான முறையில் நூடுல்ஸ் சமைத்துக் கொடுக்க என்னதான் வழி?

ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

கடைகளில் கிடைக்கிற இன்ஸ்டன்ட் நூடுல்ஸை கூடிய வரையில் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அதை தண்ணீரில் கொதிக்கவிட்டு, அந்தத் தண்ணீரை எடுத்துவிட்டு பிறகு காய்கறிகள் சேர்த்துச் செய்து கொடுக்கலாம். இப்படிச் செய்கிற போது கட்டாயம் அதில் உள்ள டேஸ்ட் மேக்கர் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். டேஸ்ட் மேக்கரில் சேர்க்கப்படுகிற மோனோசோடியம் குளூட்டமேட், அதிகப்படியான உப்பு போன்றவைதான் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிற விஷயங்கள்.

அதற்குப் பதில் நிறைய குடை மிளகாய், முட்டைகோஸ், செலரி, லெட்டூஸ், பேசில் போன்றவற்றைச் சேர்த்து சமைத்துக் கொடுத்தாலே டேஸ்ட் மேக்கர் இல்லாமலேயே அந்த சுவையைக் கொண்டு வர முடியும். இன்னும் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், இப்போது கடைகளில் கிடைக்கிற கோதுமை மற்றும் கேழ்வரகு நூடுல்ஸ், பாஸ்தா, மேக்ரோனி வகைகளை வாங்கிச் செய்து தரலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ட்வின்ஸ்!! (மருத்துவம்)
Next post ட்வின்ஸ்!! (மருத்துவம்)