கேக் எடு மகிழ்வான நிகழ்வினை கொண்டாடு! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 17 Second

கடந்த இரண்டு வருடமாக கொரோனா என்ற நோயின் தொற்றால் பலர் வீட்டிலேயே இன்றும் முடங்கி இருந்தாலும் அதில் பலர் பல விதமான நன்மையினை சந்தித்துள்ளார்கள். ேவலைப்பளு அதிகமாக இருந்தாலும், தங்களின் அன்பான உறவுகளுடன் நேரம் ஒதுக்க முடிந்தது. தங்களின் தனிப்பட்ட ஆர்வத்தில் கவனம் செலுத்த முடிந்தது. பார்க்கும் வேலையைத்தாண்டி பல விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது என புதிதாக கண் திறந்தது போன்ற சூழல் நிகழ்ந்திருக்கிறது.

இதுவரைக்குமான வாழ்க்கை, ‘வேலை வேலை…’ என்று வேலையை சுற்றி தானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு குழந்தை வாழ்வை ஆரம்பிக்கும் போது படிக்கிறது. அந்த படிப்பு வேலைக்கானதாக இருக்கிறது. அந்த வேலை சம்பாத்தியத்திற்கானதாக மாறுகிறது. இதற்கு தானே பெரும்பாலும் பழக்கப்பட்டிருக்கிறோம். இதையும் தாண்டி வாழ்வின் மற்றொரு பரிணாமம் இருப்பதை இந்த கொரோனா காலம் உணர்த்தியிருக்கிறது.

நிறைய பயணிப்பது, மற்ற மக்களோடு, நபர்களோடு, இயற்கையோடு தொடர்பு ஏற்படுத்துவது, சமூகமாக ஒன்றிணைவது போன்ற விஷயங்களும் இந்த காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. மனிதர்கள் ஒரு எல்லைக்குள் இருப்பது ஒரு காலக்கட்டத்திற்கு மேல் சிரமம் தான். காலை வேலைக்கு போனால் மாலை வருவது. இரவு வேலைக்கு போனால் காலை வருவது. அதன் பின் வாழ்க்கைக்கு தேவையான மற்ற விஷயங்கள் மட்டுமே செய்வது என, அதே தொடரும் போது சிலர் ‘வேன் (wane) அவுட்’ ஆகிறார்கள். இது ஒரு வித விரக்தி மற்றும் அயற்சி போன்ற மன நிலையை ஏற்படுத்துகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் வேறொரு வாழ்க்கை முறையினை பின்பற்ற ஆரம்பிக்க துவங்கியுள்ளனர்.

நல்ல வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அதை ராஜினாமா செய்துவிட்டு தங்களுக்கான ஒரு வேலையினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு சிலர் ஒரு வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும், அயற்சி ஏற்படும் போது மட்டும் தங்களை மீண்டும் மீட்டெடுக்க அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதில் இரண்டாவது ரகம் தான் கோவையை சேர்ந்த காயத்ரி. ஐ.டியில் வேலை பார்த்து வந்தாலும், தனக்கு பிடித்த பேக்கிங் துறையினை ஆர்டரின் பேரில் செய்து வருகிறார்.

“அம்மா, அண்ணா, அண்ணி என மகிழ்வான நடுத்தர குடும்பம். படிப்பை முடித்ததும் ஐ.டியில் வேலை. கார்ப்பரேட் வேலை என்றால் சொல்லவே வேண்டாம். வேலைப் பளு அதிகமாக தான் இருக்கும். ஆரம்பக்கட்டத்தில் நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு எப்போதுமே வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சல் ஏற்பட, அதில் இருந்து என்னுடைய கவனத்தை திசை திருப்ப இந்த வேலையோடு சேர்ந்து வேற ஏதாவது செய்யலாம்னு யோசித்தேன். ஆனால், அதற்கான சூழல் அந்த வேலை கொடுக்கவில்லை. குடும்ப சூழல் காரணமாக என்னால் வேலையை விடவும் முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த வேலையே என்னுடைய உடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது. அதனால் வேலையை விட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். ஐ.டி வேலை இல்லை என்றாலும், வேற வேலைக்கு செல்லலாம்ன்னு நினைத்த போது அதற்கேற்ப வேலையும் கிடைக்கவில்லை. சம்பளம் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியாக இன்னொருத்தரை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எவ்வளவு காலம் அடுத்தவரை சார்ந்து இருப்பது… அவர்களுக்கு ெதாந்த ரவு கொடுக்க வேண்டான்னு நினைச்சேன். நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைக் கற்றுக் கொண்டு நமக்கான ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்ன்னு நினைச்சேன்.

ஆனால் அதற்கு கட்டணமும் அதிகமாக இருந்ததால் அந்த எண்ணத்தையும் கைவிட்டேன். இந்த சமயத்தில் சென்னையில் ஐ.டி சார்ந்த வேலைகிடைத்தது. சென்னைக்கு போக நினைத்த போது கொரோனா தாக்கம் என்பதால், எல்லாரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்பதால், நான் மறுபடியும் கோவைக்கே வந்துட்டேன். வீட்டில் இருந்து வேலை பார்த்தாலும், அதிக நேரம் கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பதால், மீண்டும் உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்தது. அதனால் மறுபடியும் ஒரு ஆல்டர்நேட் வேலை ஏதும் இருக்கான்னு தேடினேன். அப்படித்தான் யூடியூப்பில் கேக் செய்யும் முறைப் பற்றிய வீடியோவைப் பார்த்தேன். எளிமையான முறையில் அந்த வீடியோ இருந்ததால், கேக் செய்யலாம்ன்னு முடிவு செய்து அது குறித்து அதிகம் தேட ஆரம்பித்தேன்.

ஏற்கனவே வேலையிழந்த நேரத்தில் இன்னொருவரை பொருளாதார ரீதியாக சார்ந்திருந்திருந்ததால், தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலைக்கு இடையே கேக் செய்ய முடிவு செய்தேன். இணையத்தில் பேக்கிங் சார்ந்த பொருட்கள் ஆஃபரில் கிடைக்க, உடனே வாங்கினேன். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இணையத்திலேயே கற்றுக்கொண்டேன். அதைக் கொண்டு முதல் முதலாக கேக் செய்து பார்த்தேன். ரொம்பவே நன்றாக வந்தது. அதன் பின் என் மேல் ஓரளவு நம்பிக்கை வந்தது. குடும்ப நபர்கள், நண்பர்களுக்கு செய்துக் கொடுத்தேன். அவர்கள் அதில் உள்ள நிறை குறைகளை சொன்னார்கள். அதை எடுத்துக் கொண்டு என்னுடைய கேக்கில் பல வித மாற்றங்களை கொண்டு வந்தேன்.

இப்போது என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக பலர் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்’’ என்று கூறும் காயத்ரி குடும்பத்தின் ஆரதவு தான் தன்னை ஒரு பேக்கராக மாற்றியுள்ளதாக கூறினார். ‘‘என் குடும்பம் கூட்டு குடும்பம். அம்மாவோடு உடன் பிறந்தவர்கள் ஐந்து அக்கா தங்கை. அம்மாதான் கடைசி. ஏதாவது ஒரு நிகழ்வு என்றால் எல்லோரும் ஒன்று கூடுவோம். அப்படி கூடும் போது எல்லோரும் ஒன்றாக உணவு சமைத்து, பரிமாறி மகிழ்வோம். அதில் இனிப்புகளில் என்னுடைய கேக்கும் இணைந்திருக்கும். இப்படி தான் நான் செய்யும் கேக்கை என் சகோதர, சகோதரிகள் மற்றவர்களிடம் சொல்லி குடும்பத்தினர் நண்பர்கள் மட்டுமில்லாமல் வெளி ஆர்டர்களையும் எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். இது எனது இரண்டாவது வேலையே தவிர, ஏற்கனவே நான் பார்த்துக் கொண்டு இருக்கிற ஐ.டி வேலையை விடவில்லை. ஒரு கட்டத்தில் சிறந்த கேக் நிபுணராக என்னை உணரும் போது முழுவதும் இதை தொடர முடிவெடுத்துள்ளேன்.

என் கேக்கின் தனித்துவம் ஃப்ரெஷ்ஷாக கொடுக்க வேண்டும் என்பது தான். ஆர்டர் வந்த பிறகு தான் செய்ய ஆரம்பிப்பேன். ஏற்கனவே செய்து வைப்பது எல்லாம் கிடையாது. சில இடங்களில் இரண்டு, மூன்று நாட்கள் ஃப்ரீசரில் வைத்த கேக் தான் கொடுக்கிறார்கள். நான் கேக் செய்ய ஆரம்பித்த பிறகு தான் ஃப்ரெஷ்ஷாக ேபக் செய்த கேக்கிற்கும். பழைய கேக்கிற்குமான வித்தியாசமே தெரிய வந்தது. அதனாலேயே எந்த வேலையாக இருந்தாலும், ஃப்ரெஷ்ஷான கேக்கினை கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியா இருக்கேன்.

மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன் மற்றும் வடிவங்களிலும் செய்து தருகிறேன். எல்லா வகையான ஃப்ளேவர் கேக்குகளும் செய்வதால், அவர்கள் விரும்பும் கேக்கினை செய்துக் கொடுப்பது சுலபமாக உள்ளது. அதே போல் குழந்தைகளுக்கான கேக்குகளில் நான் எந்த விதமான செயற்கை நிறங்களையும் சேர்ப்பதில்லை. சிலர் கலர்ஃபுல்லாக வேண்டும் என்று கேட்பார்கள். நிறங்களால் ஏற்படும் விளைவிளை அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பேன். காரணம் கேட்டால் கூட, ‘இல்லை இது எப்படி செய்திருப்பாங்கனு சொல்ல முடியாது. ஒரு நம்பிக்கையில் தான் சேர்க்கிறோம்.

எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் தவிர்க்கலாமே’ என்று நானும் குழந்தைகள் கேக் சாப்பிடும் போது நாம் பார்த்திருப்போம். நிறங்கள் அடங்கிய கேக் சாப்பிடும் போது அவர்கள் கை, வாய் எல்லாம் அந்த நிறம் ஒட்டி இருக்கும். அதனாலேயே பெரும்பாலான என்னுடைய கேக்குகளில் நான் செயற்கை நிறங்களை சேர்ப்பதில்லை. பொதுவாக இன்று எல்லா மகிழ்வான நிகழ்வுகளின் துவக்கத்திலும் கேக் வெட்டி கொண்டாடி ஆரம்பிப்பது வழக்கமாக மாறியுள்ளது. அவர்களது அந்த இனிமையான நேரத்தில் என் கேக்கினை, எல்லோரும் மகிழ்வாக எடுத்து சாப்பிடும் போது மனசுக்கு நிறைவாக உள்ளது’’ என்கிறார் காயத்ரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆனந்தவல்லி புத்தக மதிப்புரை!! (மகளிர் பக்கம்)
Next post துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்)