மூன்றடுக்கு முகக்கவசம்!!(மருத்துவம்)
துணியால் செய்யப்பட்ட முகக்கவசம், சாதாரண ஒற்றை அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க், மூன்றடுக்கு முகக்கவசம், N95 முகக்கவசம் என பல வகைகளில் முகக்கவசங்கள் விற்பனைக்கு உள்ளன. துணியினாலான முகக்கவசம் கொரோனா பரவுதலை பொறுத்தமட்டில் எந்த நற்பயனையும் தருவதில்லை. அதேபோல் சர்ஜிக்கல் மாஸ்க் எனும் ஒற்றை அடுக்கு முகக்கவசமும் முழுமையான பாதுகாப்பை தருவதில்லை.
மூன்றடுக்கு முகக்கவசமே முழுமையான பாதுகாப்பை தரும். பொதுமக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிவதே போதுமானது. முழுப்பாதுகாப்பு அளிக்கும் மூன்றடுக்கு முகக்கவசம் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதன்பின் அதனை சரியான முறையில் பாதுகாப்பாக உயிர்கழிவு மேலாண்மை திட்டத்தின் அறிவுறுத்தலின்படி கழிவு நீக்கம் செய்ய வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய மூன்றடுக்கு முகக்கவசத்தினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது கூடாது.இவ்வாறு செய்யும்போது நோய் தொற்று மற்றும் பரவல் ஏற்படும் வாய்ப்புள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றைய நோயாளர்களிடையே நேரடி தொடர்பில் இருப்பவர்கள் N95 வகை முகக்கவசங்கள் அணியலாம். பொதுமக்கள் அணிய வேண்டியதில்லை.