கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 41 Second

*எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, ஓரிரு இஞ்சித்துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.
*ஊறுகாயை ஜாடியில் போடும்முன் சூடாக்கிய எண்ணெயில் நனைத்த  துணியால் ஜாடியின் உட்புறத்தை  துடைத்து பின்னர் ஊறுகாய் போட்டால் கெட்டுப் போகாது.
*மாங்காய் தொக்கு செய்யும்போது நெல்லி அளவு வெல்லம் போட்டு கிளற தொக்கு சுவையாய் இருக்கும்.
*எலுமிச்சை காய் ஊறுகாய் போடும் முன் நன்றாக கொதிக்கும் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை போட்டு கலக்கிய பின் அதில் முழு பழங்களை போட்டு மூடி பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து நறுக்கி ஊறுகாய் போட்டால் தோலின் கசப்பு அடியோடு இருக்காது,

– எம் வசந்தா, சென்னை.

*சாதம் மீந்து போய், மறுபடியும் சூடாக்கினாலும் சாப்பிடப் பிடிக்காது. அந்த சமயத்தில் சிறிது உளுத்தம் பருப்பை ஊறவைத்து, கெட்டியாக அரைத்து சாதத்துடன் கலந்து பிசைந்து போண்டா செய்யலாம்.
*பழைய சாதம், ரவை, மைதாமாவு கலந்து மிக்சியில் அரைத்து, கடுகு, மிளகாய் தாளித்து, தோசை வார்க்கலாம்
*மீந்து போன சாதத்தில், தேவைக்கேற்ப உப்பு, பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்து சீரகம் கலந்து வடகம் இடலாம்.

– ஆர். பத்மப்ரியா, திருச்சி.

*எந்த காய்கறி கிழங்கு வகைகளை நறுக்கினாலும் ஒரே சீராக நறுக்க வேண்டும். அப்போதுதான் ஒரே சமயத்தில் எல்லாம் வெந்து போகும். இல்லையென்றால் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருக்கும்.
*பால் புளித்துப் போய் விட்டால் அதில் சமையல் சோடா உப்பைப்போட்டு காய்ச்ச பால் திரிந்து போகாமல் இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு பிசையும்போது வாழைப்பழத்தையும், மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி தயாரித்தால் சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
*வடக மாவில் நெல்லிக் காய்களை வேகவைத்து கொட்டை நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்து சேர்த்தால், வித்தியாசமான சுவையுடன் வைட்டமின் சி நிறைந்து இருக்கும்

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*லட்டு பிடிக்கும் போது ஏதாவது பழ எசென்ஸை விட்டுக் கலந்து பிடித்தால் லட்டின் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.
*நல்ல பச்சையாக இருக்கும் பாகற்காயை விட வெள்ளையாக இருக்கும் பாகற்காயில்தான் சத்துக்கள் அதிகம்.

– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

*காலிஃபிளவர் சமைக்குபோது ஒரு துளி பால் சேர்த்தால் பூப்போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.
*லேசான சூடான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து, நறுக்கினால் கண்கள் எரியாது.
*பூரி செய்யும்போது, பூரி மாவில் சிறிதளவு ரவையை போட்டு பிசைந்து பூரி தயாரித்தால், பூரி வெகு நேரம் மொறு மொறு வென்று இருக்கும்.

– எஸ்.பாரதி, மதுரை.

*வாழைத் தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. இதைப் பொடிப் பொடியாய் நறுக்கி பக்கோடா தயாரித்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*பால், தயிர் பாத்திரங்கள் அடிப் பிடித்துவிட்டால் அதில் தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு, அரை மூடி எலுமிச்சையை பிழியவும். பிறகு சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.
* அவியலுக்கு காய்கறிகளை வேகவைத்தபிறகு அதில் அரைத்த தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு தயிரைச் சேர்த்தால் அவியல் நீர்ததுப் போகாது.

– ஜி.இந்திரா, திருச்சி.

*கொத்துமல்லி தழையைப் பயன்படுத்தியதும், காம்புகளை சிறிது புளி சேர்த்து சிறு கல் உரலில் இடித்து காயவைத்து எடுத்து வைத்தால், ரசம், குழம்பு, சட்னிக்குப் பயன்படுத்தலாம்.
*தோசைமாவில் ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு வைத்தால் மறுநாள் வரை புளிக்காது. மிளகாயின் வாசனையும் சேர்ந்திருக்கும்.
*மிஞ்சிய சாதத்தை ஹாட்பேக்கில் போட்டு வைத்தால் சாதம் அப்படியே இருக்கும்.

– ஆர். பிரசன்னா, திருச்சி.

*அடை தோசைக்கு மாவு அரைக்கும்போது அரைகப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்துக் கொண்டால் அடை தோசை ருசியாக இருக்கும்.
*மோர் குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
*மிளகாயை வறுத்து பொடி செய்யும்போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால் அவை கமறாமல் இருப்பதோடு பொடியும் மணமாக இருக்கும்.
*கார பட்சணங்கள் செய்யும்போது மிளகு, சீரகத்தை பொடி செய்து சேர்க்கவும். வாயு கோளாறு நீங்கும். ஜீரணம் நன்றாக இருக்கும்.

– ஆர். பிரகாசம், திருவண்ணாமலை.

மேங்கோ ஐஸ்க்ரீம்

தேவையானவை:

கனிந்த மாம்பழத்துண்டுகள் – 2 கப்,
சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 1 ஸ்பூன்.
சுண்டக் காய்ச்சிய பால் – 1 கப்.

செய்முறை:

சுண்டக் காய்ச்சிய பாலில் மாம்பழத்துண்டுகள், கார்ன்ஃப்ளார் மாவு,  சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ்க்ரீம் கிண்ணங்களில் நிரப்பி  ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து சுமார் ¾ மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான,  சத்தான மேங்கோ ஐஸ்க்ரீம் தயார். மாம்பழத்தோடு, வாழைப்பழம், பேரீச்சம்  பழம், தர்பூசணி பழம் சேர்த்து பழ ஐஸ்க்ரீமும் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?(அவ்வப்போது கிளாமர்)
Next post உங்கள் குழந்தை வெஜிடபிள் மாதிரி… ஒரே இடத்தில்தான் இருப்பான்! (மகளிர் பக்கம்)