
செரிமானம் மேம்பட…!!(மருத்துவம்)
நார்ச்சத்து மிகுந்த உணவுகளையும் காய்கறிகளையும் கீரைகளையும் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவகைக் காய்கறிகளையும் தினசரி ஒன்றென எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.பழங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு நிறக் கனி என அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் அனைத்துவகைப் பழங்களின் பலன்களையும் பெற இயலும்.
தினசரி மூன்று லிட்டர் தண்ணீராவது பருக வேண்டியது அவசியம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை லிட்டர் தண்ணீராவது பருகுங்கள். இது காலைக் கடனை நன்றாகக் கழிக்க உதவும்.உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினசரி பத்தாயிரம் காலடிகள் அல்லது மூன்று கிலோ மீட்டராவது நடக்க வேண்டியது அவசியம். இது செரிமானத்தை இயல்பாக்கும். நடைப்பயிற்சி, ஜாகிங், ஓட்டம், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றை தினமும் பின்பற்றுவது நல்லது.