விமானப் பயணம்… என்ன சாப்பிடலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 15 Second

பொதுவாகவே வேறு ஊருக்கு பயணம் செய்யும் போது நாம் உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருப்போம். பட்டினிகூட இருப்போமே தவிர தரமற்ற உணவினை சாப்பிடமாட்டோம். இதனால் உடம்புக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு விடும் என்ற பயம். இனி அந்த பயம் வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே உணவுப் பிரியராக இருந்து, பயணத்தை மேர்கொள்ளுபோது, உங்கள் பயணத்தை இன்னும் கொஞ்சம் சுவையாக மாற்ற ஃபேர்போர்டெலின் பயணக் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும்.

லைட்டாக  சாப்பிடுங்கள்

ஒவ்வொரு பயணமும் நம் மனதில் நிலைத்து இருக்கும் நியாபகங்கள். குறிப்பாக விமானப்பயணம் என்பது எப்போதாவது நிகழக் கூடியவை. அந்த சமயத்தில் ஆரோக்கியமான உணவினை சாப்பிடலாம். சர்க்கரை மற்றும் எண்ணை பதார்த்தங்களை தவிர்க்கலாம். அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பழங்கள் சிறந்த தேர்வு. உணவு கட்டுப்பாடுகள் இருந்தால் சிறந்தது.

புதிய பரிசோதனை வேண்டாம்

பயணம் செய்யும் போது புதிய உணவுகளை பரிசோதிப்பது நல்லதல்ல. காரணம் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி தெரியாது. பரிச்சயமான உணவினை உட்கொள்ளுங்கள்.

மினி-மீல்ஸின் சுவையான பிக்னிக்

விமானத்திலோ அல்லது ரயிலிலோ எப்படி பயணம் செய்தாலும், சிற்றுண்டி போன்ற உணவுகள் கையில் இருப்பது அவசியம். உங்களின் தின்பண்டங்களைத் திட்டமிட்டு, பேக் செய்யுங்கள். உங்கள் சுவை மொட்டுகளை மகிழ்விக்க திடமான உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமான மற்றும் சுவையான நட்ஸ், விதைகள் மற்றும் உலர்ந்த பழங்களை பேக் செய்யலாம். உங்களுக்கு கொஞ்சம் காரமாகவும், அதே சமயம் சுவையாக சாப்பிட விரும்பினால் ரொட்டி/ பேஸ்ட்ரிகளுக்கு பதில் வறுத்த கொண்டைக்கடலை அல்லது முழு தானிய வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், சிறிய இனிப்பு அல்லது கேண்டி பாரும் எடுத்துச் செல்லலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

வெங்காயம் அல்லது பூண்டு போன்ற காரமான உணவுகள் மற்றும் தின்பண்டங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மொறுமொறுப்பான உணவுகளையும் தவிர்க்கலாம். இந்த குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் பயணம் மிகவும் அழகாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விதவிதமான கொழுக்கட்டைகள்! (மகளிர் பக்கம்)
Next post உடல் சூட்டை தணிக்கும் 7 எண்ணெய்கள்!(மருத்துவம்)