கோடைக்கான பழங்கள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 1 Second

கோடையில் நீர் சத்து அதிகம் அவசியம். இந்த சத்து பழங்களில் கிடைக்கிறது. நீர் சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடல் வெப்பத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. கோடையை சமாளிக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

*தர்பூசணியில் 90% தண்ணீரே இருப்பதால் உடலின் தண்ணீர் அளவினை சமன்படுத்தவதில் இது சிறந்தது. அதில் இருக்கும் லைசோ பின் என்ற வேதிப்பொருள் நமது சருமம் வெயிலில் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். உடல் சூட்டையும், தாகத்தையும் தனித்து ஒரு ஃபிரிட்ஜில் இருபது போன்ற உணர்வை தர்பூசணி தரும். வயிற்றையும் இது குளுமையாக்கும். கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். இதை மதிய நேரத்தில் சாப்பிடுவது நல்லது.

*வெயிலில் அலைவதால் ஏற்படும் தசைப்பிடிப்பைத் தடுக்க ஆரஞ்சு சாப்பிட வேண்டும். வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேறும் சத்துக்களை இது ஈடு செய்யும். பொட்டாசியம், வைட்டமின் ‘சி’, தயாமின் ஃபோலேட் போன்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. சூரிய வெப்பத்தில் இருக்கும் புற ஊதாக் கதிர்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க இது உதவுகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் இதை சாப்பிடக் கூடாது. உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சாப்பிட்டால் செரிமானத்தை இயல்பாக்கும்.

*உடல் வெப்பநிலையை சீராகப் பராமரிப்பதில் வாழைப்பழத்துக்கு நிகர் ஏதுமில்லை. இரும்புச் சத்தும், பொட்டாசியமும் நிறைந்த இந்தப் பழம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் சோர்வை தடுக்கும். அத்திப்பழமும் இதே போல உடலை உற்சாகமாக வைத்திருக்க வல்லது.

*மாம்பழத்தில் இரும்பு சத்தும் செலினியமும் நிறைந்துள்ளது. இதை அளவாக சாப்பிட வேண்டும். பாலோடு கலந்து மில்க் ஷேக்காக சாப்பிடலாம்.

*வெயிலில் அலைந்து வீடு வந்ததும் எலுமிச்சை ஜூசில் சர்க்கரையும் சிறிதளவு உப்பும் சேர்த்து சாப்பிட்டால், வெயிலினால் ஏற்பட்ட நீரிழப்பினை உடனே ஈடு செய்யும். வைட்டமின் ‘சி’ தாகத்தைத் தணிக்கும்.

*வெயிலில் வெளியில் செல்வதற்கு முன்பாக திராட்சை சாப்பிடலாம். உடல் இழக்கும் நீர்ச்சத்தை இது ஈடு செய்யும்.

*கோடையில் உணவு இயல்பாக ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அன்னாசிப் பழத்தில் இருக்கும் ப்ராமெலியர் கொழுப்பையும், புரதத்தையும் நன்றாக செரிக்க செய்கிறது.

*கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற கோடை நோய்கள் வராமல் தடுக்கும்.

*பப்பாளி நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அற்புதமான ஒரு பழம்.

*ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு போன்ற பழங்களை ஃப்ரூட் சாலட்டாக சாப்பிட்டால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கத்தரிக்காயை சாதாரணமா நினைக்காதீங்க…!!(மருத்துவம்)
Next post பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% தான்!!(அவ்வப்போது கிளாமர்)