குளுகுளு வெள்ளரிக்காய்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 58 Second

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

*அழகு, ஆரோக்கியம் இவை இரண்டையும் அள்ளித் தரும் வெள்ளரிக்காய் கோடையில் ஏற்படும் சோர்வை போக்கி குளுமை தருவதோடு நம் உடலின் தோற்றத்தையும், தோலின் மென்மையையும் மேம்படுத்தும்.

*முழுவதும் நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது வெள்ளரிக்காய். சிறிதளவு மாவுச் சத்தும், புரதச் சத்தும் இருந்தாலும் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.

*குடலில் எளிதாக செரிமானமாக்கூடிய நார்ச்சத்தையும் பெற்றுள்ளது. மிக மிகக் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது.

*வெள்ளரிக் காயில் காணப்படும் குக்கர்விட்டேசின் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த வேதிப் பொருளாகும்.

*உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளோர் அன்றாடம் தாங்கள் சாப்பிடும் உணவில் 100 கிராம் அளவு திட உணவைக் குறைத்து அதற்குப் பதில் வெள்ளரிக்காய் உண்பதால் நல்ல பலன் காணலாம்.

*நீர்ச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் தொல்லைகளான கண் எரிச்சல், வறண்ட சருமம், ஒற்றைத் தலைவலி, மயக்கம், நீர்சுருக்கு போன்ற பிரச்னைகள் வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் தீரும்.

*மூக்கின் மேல் ஏற்படும் கரும் புள்ளிகள், துளைகள் மறைய வெறும் வெள்ளரிச் சாற்றை பஞ்சில் நனைத்து வாரம் ஒரு முறை தடவி வருவது சிறந்த பலன்களைத் தரும். முகம், கழுத்துப் பகுதிகளிலும் வெள்ளரிச் சாற்றை தடவி அரைமணி நேரம் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளலாம். இதனால் பருக்கள் குறையும்.

*வெள்ளரிக்காயை பச்சையாகத் தோலோடு உண்பது தான் நல்லது. மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியைத் தருவது அதிலுள்ள நீர்ப்பாகம் இல்லை. இதில் அதிக அளவில் கிடைக்கும் சோடியம் தான் அக்குளிர்ச்சியைத் தருகிறது.

*வெள்ளரிக்காய் ‘சாலட்’ மிகவும் விசேஷமானது. தோல் சீவாமல் வெள்ளரிக்காயை வட்டமான வில்லைகள் செய்து ஒரு வில்லையின் மேல் ஒரு வில்லை தக்காளி அதன் மேல் ஒரு வில்லை வெங்காயம் வைத்து மிளகுத் தூளையும் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அத்துடன் ஒரு சத்துள்ள உணவாகவும் ஆகும்.

*பச்சை வெள்ளரிக்காயின் சாற்றை முகத்தில் தடவி அப்படியே உலரவிட்டால் முகத்தில் அபூர்வமான அழகு மேலிடும்

*தாகத்தைத் தணிப்பதில் வெள்ளரிக் காயைப் போல வேறு ஒன்றும் கிடையாது என்றே சொல்லலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இளநீர்… இளநீர்!(மருத்துவம்)
Next post மேக்கப்-மாய்ச்சரைஸர்!! (மகளிர் பக்கம்)