இளநீர்… இளநீர்!(மருத்துவம்)

Read Time:2 Minute, 31 Second

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.

  • இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு மருந்து போன்றது. இளநீரும், வாழைப்பழமும் சாப்பிட்டால் அதைவிட சிறந்த சத்துணவு வேறு இல்லை.
  • இளநீரில் மிகுந்த அளவில் தாதுச்சத்து உள்ளதால் இது உடலுக்கு அழகூட்டும் தன்மை கொண்டது. நரம்பு வியாதிகளைப் போக்கி நரம்புகளுக்கு சக்தியைக் கொடுக்கும்.
  • தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை அலசினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து முகம் பொலிவு பெறும்.
  • கோடைக் காலத்தில் அதிக தாகம், உடல் தளர்ச்சி, அசதி போன்ற உபாதைகள் நமக்கு விரைவில் ஏற்படுகின்றன. இச்சமயத்தில் நாம் இளநீர் குடித்தால் இதில் இருக்கும் தாதுப்பொருட்கள் வியர்வை மூலம் வெளியேறிய தாதுக்களை ஈடு செய்கிறது.
  • கோடையில் ஏற்படும் சிறுநீர் கடுப்பைப் போக்க தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும்.
  • உடம்பின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியூட்ட இளநீர்தான் பெரிதும் உதவுகிறது. இளநீரிலிருக்கும் சத்துக்களும், தாதுக்களும் இதயத் தசைகளை வலுப்படுத்துகின்றன. இதயத்துடிப்பை சீராக்குகின்றன.
  • குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். தினமும் இளநீர் குடித்தால் உடல் சூடு தணியும். சோர்வு நீங்கும். வயிற்றுப்புண் ஆறும். தாகத்தை தணிக்கும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்”!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குளுகுளு வெள்ளரிக்காய்! (மருத்துவம்)