தூக்கத்தை அரவணைக்கும் கமலாப்பழம்!(மருத்துவம்)

Read Time:2 Minute, 14 Second

ஆரஞ்சுப்பழத்தை தான் நாம் ‘கமலாப்பழம்’ என்று சொல்கிறோம். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் கமலாப்பழம் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட ருசியாகும். மிகவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இந்த கமலாப்பழத்தில் எண்ணற்ற பலன்கள் உள்ளன.

  • கமலாப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி1, பி2, சி போன்ற சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. இதனை உட்கொள்வதால், ரத்தம் ஏராளமாக உடலில் ஊறும், உடல் பலம் பெறும். வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நல்லது.
  • உடல் பலகீனமாக இருப்பவர்கள் கமலாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்வு பெற்று நல்ல பலம் பெறுவார்கள். இது ஒரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
  • தூக்கமின்றி தவிப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றில் ஒரு தேக்கரண்டியளவு தேனை விட்டுக் கலக்கிச் சாப்பிட்டால் போதும். ஆழ்ந்த தூக்கம் அவர்களை அரவணைக்கும்.
  • தூக்கத்தை மட்டுமல்ல, துக்கத்திற்கும் சிறந்த பரிகாரத்தைத் தரும் பழம் கமலாப் பழமாகும். துக்கத்தைப் போக்கக்கூடிய அற்புதமான பழம் கமலாப்பழம். வாழ்க்கையில் விரக்தியடைந்து மனம் நொந்து போனவர்கள் தினந்தோறும் ஒரு கமலாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் போதும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடைக்கு குளுகுளு தரும் நுங்கு!! (மருத்துவம்)
Next post சரும அழகு பெற அரோமா ஆயில்!!(மகளிர் பக்கம்)