நெயில் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 6 Second

‘விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு’ என, விரலை மீறி வளர்ந்த நகங்களை வெட்டித் தூக்கி எறிந்த காலமெல்லாம் மலையேறி, நகங்களை ‘நெயில் ஆர்ட்’ என்று டிரெண்டாக்கி விட்டனர் இளைஞர்கள். இது புதுசு மட்டுமல்ல ரொம்பவே இன்ட்ரெஸ்டிங்கான பீல்டும். காரணம் இது ஆர்ட் தொடர்பானது. எனவே இளைஞர்களிடம் டிரெண்டிங் ஆகுது.

வடநாட்டவர்கள் வருகைக்குப் பின், மருதாணி மெஹந்தியாக மணப் பெண்கள் கரங்களை ஆர்ட் வடிவில் அலங்கரிக்கத் தொடங்கியது. தாங்கள் அணியும் உடைக்கு ஏற்ற மேட்சிங்கான நெயில் பாலீஷ்களை பெண்கள் தேடத் தொடங்கி, இப்போது நெயில் ஆர்ட் என ஒரு துறையே இயங்க ஆரம்பித்துள்ளது. நெயில் ஆர்ட் என்பது மேக்கப்பைவிட அதிக நேரம் எடுக்கும். மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் இதற்கென ஸ்டுடியோக்கள் தனியாக இயங்கி வருகின்றன. ப்ரைட்ஸ், மாடல்ஸ், செலிபிரேட்டிஸ், ஈவென்ட்ஸ் துறை சார்ந்தவர்களுக்கான நெயில் ஆர்ட் ஸ்டுடியோவை இயக்கிக் கொண்டே நெயில் ஆர்ட் வகுப்புகளையும் எடுத்துவரும் மேக்கப் ஆர்டிஸ்ட் ரிபியாவை சந்தித்தபோது…

நான் பி.இ.எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். மேக்கப் என்னோட ஒன் ஆஃப் த ஃபேஷன். நியூயார்க் சென்றிருந்தபோது நெயில் ஆர்ட்டை விரும்பிக் கற்றுக் கொண்டேன். நெயில் ஆர்ட்டை பொறுத்தவரை நெயிலில் ஸ்டோன் பிக்ஸ் பண்ணுவது, 2டி., 3டி என இந்த துறை மிகப் பெரிய அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

1000க்கும் மேல் வைட் வெரைட்டி ஆஃப் நெயில் ஆர்ட் டிரெண்ட்ல இருக்கு. எங்கள் ஸ்டுடியோவில் 50 வெரைட்டி பயன்படுத்துகிறோம். லேட்டஸ்ட் டிரெண்ட் என்னவோ அதற்கான கிட்ஸ் எங்கள் ஸ்டுடியோவில் கண்டிப்பாக உண்டு. ஆர்ட் தாண்டி இப்போதைய இளைஞர்கள் புது டிரெண்ட் நெயில் எக்ஸ்டென்ஷன்ஸ். பெரும்பாலும் மாடல்ஸ் மற்றும் செலிபிரேட்டிஸ் நெயில் எக்ஸ்டென்ட்ஸை விரும்பி வந்து செய்து கொள்கிறார்கள்.

என்னதான் நீளமாக நெயில்களை விரல்களில் வளர்த்தாலும் எதாவது ஒரு நேரத்தில் டக்குன்னு உடஞ்சுடும். கஷ்டப்பட்டு வளர்த்த நகத்தில் ஒன்று உடைந்துவிட்டாலும் எல்லா விரல்களிலும் இருக்கும் நகங்களையும் கட் பண்ணியே ஆகணும். அதற்கு தீர்வுதான் நெயில் எக்ஸ்டென்ஷன் என தொடர்ந்து பேசினார் ரிபியா.. எக்ஸ்டென்ஷன் செய்த நெயிலைப் பார்த்தால் ஆர்டி ஃபீஷியல் மாதிரி தெரியவே தெரியாது. அத்தனை நேச்சுரல்ஸ் இருக்கும். எக்ஸ்டென்ட்ஸ் ஒரு முறை செய்து விட்டால் 3 வாரம் தொடங்கி 1 மாதம் வரை அப்படியே இருக்கும். நெயில் எக்ஸ்டென்ட்ஸ் போட்டு அதன் மேல் பாலீஷ் போட்ட பிறகு அது ஒரிஜினல் நெயிலா எக்ஸ்டென்ட்ஷனான்னு கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார் இவர்.

நெயில் எக்ஸ்டென்ட்ஷன்ல ஜெல், அக்ரலிக்ஸ், ஃபாலி ஜெல், ஃபைபர், க்ளாஸ் ஃபைபர் என வெரைட்டிகள் உண்டு. இதில் எந்த டைப் எக்ஸ்டென்ட்ஸ் வேண்டுமானாலும் எடுத்துக்கலாம். பெரும்பாலும் பெண்கள் அக்ரிலிக் எக்ஸ்டென்ஷன்ஸ்தான் விரும்பி எடுக்குறாங்க. நாங்கள் எங்கள் ஸ்டுடியோவில் பெரும்பாலும் ஜெல் எக்ஸ்டென்ஷன்களையே பயன்படுத்துகிறோம். ஜெல் கொஞ்சம் லிக்விடா செமி சாலிட்டாக இருக்கும். ஜெல்லை அப்ளை செய்த பின் யுவி ரேஷ் மெஷினுக்குள் விரலை வைத்து காயவைப்போம். அப்போதுதான் நெயில் ஷேப் ஸ்ட்ராங்காக மாறும். அதற்குமேல் இரண்டு மூன்று லேயர் ஜெல் அப்ளை செய்து சேப்பிங் செய்து பஃபெர் செய்தபின், ஒரிஜினல் நெய்ல்ஸ் மாதிரியே தோற்றம் வந்து
விடும்.

ஜெல்லில் நெய்ல் எக்ஸ்டென்ட்ஸ் செய்து அதன் மீது பாலீஷ் போட்டு தேவையான நெயில் ஆர்ட்டைக் கொண்டு வருவோம். நார்மலாக நாம் அணியும் நெயில் பாலீஷ் இரண்டு நாளில் விரலை விட்டு உரிந்து வந்துடும். ஆனால் ஜெல் பாலீஷ் ரொம்பவே ஸ்ட்ராங். இதுதான் நெயில் எக்ஸ்டென்ஷன்ஸ் பேசிக். கஸ்டமர் என்ன லெங்த் கஸ்டமைஸ்ட் பண்றாங்க என்பதைப் பொறுத்து நெயில் எக்ஸ்டென்ட்ஸ் நேரம் அதிகரிக்கும். குறைந்தது இதற்கு 3 மணி நேரம் தேவைப்படும்.

3500 ரூபாயில் தொடங்கி நெயில் லெங்த்தைப் பொறுத்து நேரமும் காஸ்டும் அதிகமாகும். நெயில் ஆர்ட்டுக்கு என்ன ஆர்ட் கேக்குறாங்க என்பதைப் பொறுத்து பெர் பிங்கர் சார்ஜ் குறைந்தது 150 ல் தொடங்கும். ஆர்டிஸ்ட்ஸ் என்றால் நெயில் எக்ஸ்டென்ட்ஸ் பாலீஷோடு டிரெண்டியா நிறுத்திக்குவாங்க. மணப் பெண்கள் ஸ்டோன்ஸ் வச்சு கொஞ்சம் ஹெவியாக ரிச் லுக்கில் கேட்பார்கள்.

எக்ஸ்டென்ஷனுக்கு விரல் நுனியில் மினிமம் ஒரு லேயர் ஆஃப் நெயில் இருக்கணும். சிலர் டிரண்டி டிரெடிஷ்னல் இரண்டுக்கும் ஏற்ற மாதிரி காமனான நெயில் ஆர்ட் செய்யச் சொல்லிக் கேட்பார்கள். சில கஸ்டமைஸ்ட் டிசைன்களும் உண்டு. சிலர் அவர்களாகவே கூகுளில் சர்ச் செய்து நெயில் ஆர்ட் ரெஃபரென்ஷோடு வருகிறார்கள். சிலவகை ஆர்ட்டுக்கு பாலீஷ் செய்து ஸ்டிக் பண்ணுவோம். பிறகு அதன் மேல் இன்னொரு லேயர் பாலீஷ் போடுவோம்.

நெயில் எக்ஸ்டென்ட்ஸ் மற்றும் நெயில் ஆர்ட் வகுப்புகளை எங்கள் ஆர்டிஸ்டிக் ஸ்டுடியோவில் 6 முதல் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கும். இது ஒரு சர்டிஃபிகேட் கோர்ஸ். நெயில் புராடக்ட்களை நாங்களே கொடுத்துவிடுவோம். மேக்கப் ஆர்டிஸ்ட், சலூன் ஓனர்ஸ் விரும்பி வந்து கற்றுச் செல்கிறார்கள். ஃப்ரீலேன்ஸ் செய்வதற்காகவும் சிலர் வந்து கற்றுக்கொள்கிறார்கள். சலூன் ஓனர்ஸ் சிலர் அவர்களின் எம்ளாயிஸ்களை கற்றுக்கொள்ள எங்கள் ஸ்டுடியோவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

நெயில் ஆர்ட் என்பது வெளிநாடுகளில் மட்டுமே ஃபேமஸாக இருந்த நிலையில், இரண்டு வருடத்திற்கு முன்புவரை இங்கு டிரெண்டிங்கில் இல்லைதான். வெளிநாடுகளில் இதற்கு மார்க்கெட் ரொம்பவே அதிகம். யு டியூப் சேனல்களில் வெளிநாட்டவர் இது தொடர்பாக நிறைய வீடியோக்களைப் போடபோட இங்கும் நெயில் ஆர்ட் மோகம் இளைஞர்களிடம் ஸ்டார்ட் ஆனது. இன்னும் ஒன்றரை வருடத்தில் நெயில் ஆர்ட் இங்கும் காமன் ஆயிடும் என முடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆளுமைப் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post துணையை கவரும் மசாஜ் விளையாட்டு!! (அவ்வப்போது கிளாமர்)