குழந்தைகளுக்கு டான்சில் தொந்தரவா? (மருத்துவம்)

Read Time:4 Minute, 44 Second

*உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி தொன்டையில் வலி ஏற்படுகிறதா? சரியாகச் சாப்பிடுவதில்லையா? வாயினால் மூச்சு விடுகிறார்களா? தூங்கும் போது குறட்டை வருகிறதா? மூச்சு வருகிறபோது கெட்ட நாற்றம், குரலில் மாற்றம் உண்டாகிறதா?

*இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உங்கள் குழந்தைகள டான்சில்ஸ் நோயினால் அவதிப்படுகிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள் இந்த நோய் ஆபரேஷன் செய்வதால் குணமாகிவிடும், என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-

*உங்கள் குழந்தைக்கு டான்சில்ஸ் இருந்தால், அவர்கள் உணவையோ, தண்ணீரையோ விழுங்கும் போது வலி உண்டாகும். கழுத்துப் பகுதிகளில் உள்ள நெரிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும், மூக்கடைப்பு ஏற்படும்.

*தொண்டையின் பின்புறத்தில் உள்ளது பின்சில்ஸ் மூக்கின் பின்புறம், தொண்டையின் மேல் அண்ணப் பகுதியில் உள்ளது அடினாய்டு.இரண்டுமே காற்று உட்புகும் பாதையில் அமைந்திருக்கின்றன. நோய்த் தொற்று ஏற்படக்கூடிய கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலும் உடலில் ஏற்பட உதவுகின்றன.

*ஆனால் இந்த உறுப்புகளிலே நோயை உண்டாக்கும் போது அதனை உடனடியாக மருந்துகள் மூலமோ அல்லது அறுவைச் சிகிச்சை மூலமோ குணப்படுத்தியாக வேண்டும்.

*கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அறிகுறிகள் நீண்ட காலமாகக் குழந்தைகளிடம் காணப்படாமல் அது அடினோ டான்சிலைடிஸ் நோய் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட கால நோய்த் தொற்றான அடினோ டான்சிலைடிஸ் என்பனதற்கு சில அறிகுறிகள் காணப்படும்.

1) அடிக்கடி தொண்டைப்புண் ஏற்படும் 2) டான்சில்கள் விரிவடைந்து சிவக்கும் 3) டான்சில்கள் மீது வெண்மை அல்லது மஞ்சள் நிறப்பூச்சி படரும். 4) சிறு குழந்தைகள் என்றால் தாய்ப்பால் சரிவரக் குடிக்காது 5) அடினாய்டுகள் விரிவடைந்து வாய் வழியே மூச்சு விட நேரிடும்.
6) இரவில் குறட்டையுடன் மூக்கடைப்பும் ஏற்படும். 7) சுவைப்புணர்வு வாயில் மறத்துப் போகும்.

*இந்த அறிகுறிகளை உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால், நோய்த்தொற்று உடலின் மற்ற பாகங்களுக்கு பரவ வாயப்புண்டு.

*காதில் சீழ் ஏற்படவும் டான்சிலில் உணடாகும் நோய்த் தொற்று காரணமாகும். வலி நிவாணிகள் மூலம் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தி விடலாம்.

நோய்த்தொற்று அறிகுறிகள் அடிக்கடி காணப்படுமானால் அறுவை சிகிச்சை செய்து டான்சில்ஸ் அடினாய்டுகளை அகற்றிவிடலாம்.

*முன்பெல்லாம் டான்சில் அறுவை சிகிச்சையில் ரத்த சேதம் ஏற்பட்டது. இப்போது எந்த ஆபத்தும் இல்லை. “அல்ட்ராசோனிக் ஸ்கால் பல்” என்ற புதிய கருவியின் மூலம் அறுவை சிகிச்சை செய்யயப்படுகிறது.

*இந்தக் கருவியைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் துளி கூட ரத்தம் வராது. ரத்தத்தை உறையச் செய்து வசதியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சில இடங்களில் லேசர் சிகிச்சை மூலம் சர்ஜரி நடைபெற்றாலும் வலி உண்டாகும்.

*அல்ட்ரா சோனிக் அறுவை சிகிச்சை முறையில் இப்படி வலி எதுவும் உண்டாகாது. அறுவை சிகிச்சை முடிந்த அதே நாளில் வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளை படுத்தும் திருகுவலி! (மருத்துவம்)
Next post ஏஞ்சலின் எழுத்தோவியம்!! (மகளிர் பக்கம்)