குழந்தைகளை படுத்தும் திருகுவலி! (மருத்துவம்)

Read Time:8 Minute, 6 Second

*குழந்தைகள் அம்மா வயிற்றை விட்டு வெளியெ வந்த பிறகு முதல் 3 மாதங்களில் திடீர் திடீரென வீல்.. வீல்.. என்று கதறி அழும். என்ன தான் சமாதானம் செய்தாலும் குழந்தைகள் அழுகையை நிறுத்தாது. விடாமல் அழுவதால் குழந்தையின் முகம் சிவந்து உடல் முழுவதும் வியர்த்து விடும்.

*பிறந்த குழந்தை இதுபோன்று விடாமல் அழுவது சாதாரணமானது தான். ஆகையால் இதைக் கண்டு பெற்றொர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தானாகவெ சரியாகி விடும். பொதுவாக ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வரை குழந்தைகள் அழும்.

*அதிகபட்சம் போனால் 2மணி நெரம் வரை அழலாம். ஆனால் வயிற்றில் திருகு வலி அல்லது தசைப்பிடிப்பது காரணமாக அவதிப்படும் குழந்தைகள் இன்னும் கூடுதல் நெரம் வில்லு வைக்கும். இத்தகைய குழந்தைகள் வீட்டையே தூக்கும் அளவுக்கு தாங்க முடியாத ஓசையுடன் அழும்.

*அதிலும் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது பிறகு தானாக சக நிலைக்கு திரும்பி விடும். சில குழந்தைகள் திடீர் திடீரென விட்டு விட்டு அழும். இது குழந்தையின் அடிவயிற்று தசையில் உருவாகும் வலியைபோக்க குழந்தைகள் தலையை தூக்குவதற்காக முயற்சி செய்யும் பொது கால்கள் வளையும் அல்லவா, அந்த தன்மையையும் பொறுத்து இருக்கும்.

*திருகுவலி அல்லது வயிற்று தசைப்பிழப்பால் அவதிப்படும் குழந்தைகள் முகத்தை பார்த்தால் வலியால் தவிப்பது தெரியும். குழந்தைகளின் முகம் சிவந்து விடும். சில குழந்தைகள் காற்றை அதிகமாக வெளிவிடும்.

*அடிவயிற்று தசைப்பிழப்பு திருகு வலி ஆகிய பிரச்சினைகள் இருக்கும் குழந்தைகள் மட்டும்தான் இதுபொன்று வில்லு வைக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் சூல்நிலைக்கு தகுந்தவாறு தங்களை ஆட்ட செய்வதால் கூட இது நடக்கலாம்.

*அதே நெரம் அதிக நேரம் அழுவதன் காரணமாகவும் அதிகமான கோபம்- எரிச்சலுடன் காணப்படுவதன் காரணமாகவும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் போகும்.

சமாளிப்பது எப்படி:

இதுபோன்று குழந்தைகள் வீறிட்டு அழுவதை சமாளிக்க கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு பெரிதும் உதவும்.

1. உங்கள் குழந்தையின் உடல் இயக்கங்கள் உணர்வுகளை நன்றாக கவனித்து மனப்பாடம் செய்து கொள்ளுள்கள்.

2. குழந்தைகள் தூங்குவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த நெரத்தில் குழந்தைகளை தூங்குவதற்கு பழக்கப் படுத்துங்கள்.

3. குழந்தைகளை மாலை வேளையில் குளிப்பாட்டுங்கள். பிறகு பால் கொடுங்கள். இதன் மூலம் குழந்தைகளை அமைதியான தூக்கத்துக்கு தயார் செய்ய முடியும்.

4. குழந்தைகளை ஒரே இடத்தில் தூங்க வையுங்கள். இடத்துக்கு இடம் மாற்றி தூங்க வைக்கக் கூடாது.

5. குழந்தை வீல் வீல் என அழும்போது கொஞ்ச நேரம் பொறுமையாக பாருங்கள். அழுகையை நிறுத்தினால் நீங்கள் ஒன்றும் செய்ய வெண்டாம். ஒருவேளை நிறுத்தவில்லை என்றால் 10 அல்லது 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அதை சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். உதாரணமாக மெதுவாக தட்டிக் கொடுக்கலாம். மெதுவாக அங்குமிங்குமாக நடந்து செல்லலாம். தலையை செல்லமாக வருடிக் கொடுக்கலாம். இதில் அவரவருக்கு பிடித்தமான செய்கைகளை செய்யலாம். ஆனால் உங்கள் செய்கைகள் எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு மேலும் எரிச்சல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

6. குழந்தைகள் தூக்குவதற்கு முன்பாக சில நிமிடங்கள் வரை அழுவதற்கு நீங்கள் அனுமதிக்க வெண்டும்.

7. குழந்தைகளின் உடம்போடு உங்களுடைய உடம்பை (தாய்-தந்தையரில் தாய் சிறந்த சாய்ஸ்) தோள்பகுதியுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் உடல் மீது அதிகமான அழுத்தம் கொடுத்து விடக் கூடாது. இது மிகவும் முக்கியம்.

8. குழுந்தையை கையில் தூக்கிக் கொண்டு நடக்கும்போது அதனுடைய அடிவயிறு உங்களுடைய தோளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுள்கள். ஒரு செகண்டுக்கு ஒரு ஸ்டெப் வீதம் நடந்தால் பொதும்.

9. ஒரெ இடத்தில் நின்று கொண்டு குழந்தையை மெதுவாக தட்டிக் கொடுத்துக் கொண்டே தோள்பட்டையை அங்குமிங்குமாக மெதுவாக அசையுங்கள். அதுபோல குழந்தையை மேலும் கீழுமாக எக்காரணம் கொண்டும் குலுக்கக் கூடாது.

10. குளிப்பாட்டும் போது லேசான சூட்டுடன் அதாவது வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்ட வெண்டும்.

11. எண்ணெய் அல்லது லோஸனால் குழந்தையின் உடம்பை மெதுவாக மசாஜ் செய்யலாம்.

12. சீரான மெதுவான அசைவுகள் கொண்ட இருக்கைகளில் குழந்தைகளை அமர வைக்கலாம்.

13. குழந்தைகள் எந்த செய்கையை எந்தப் பொருளை விருபுகிறதோ கூடுமானவரை அவற்றை பயன்படுத்தியே சமாதானப்படுத்த வெண்டும்.

14. குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்று குமிழிகளை முழுங்கி விடாமல் தடுக்க வெண்டும். அதற்கு பால் பாட்டிலின் மீது பொருத்தியுள்ள ரப்பரில் துளை சிறியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

15. குழந்தைகள் இருக்கும் இடத்தில் அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளவும்.

16. குழந்தைகள் தூக்கத்தில் இருந்து விழிக்கும்பொது அவர்களாகவெ விழித்துக் கொள்ளட்டும். ரொம்ப நேரமாக தூங்குகிறதே இப்படி தூங்கினால் எப்போது பால் குடிப்பது, என்று கவலைப்பட்டுக் கொண்டு குழந்தையின் தூக்கத்துக்கு இடையூறு செய்ய வெண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காதலில் ஆறு வகை..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளுக்கு டான்சில் தொந்தரவா? (மருத்துவம்)