டிராகன் பழம்!(மருத்துவம்)

Read Time:3 Minute, 18 Second

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சில பழங்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம். இதன் காரணமாகவே, இப்பழம் சமீபகாலமாகவே மக்களிடைய பிரபலமாக உள்ளது. இந்த டிராகன் பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம்:சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் சதைப் பகுதி சிறு கருப்பு விதைகளுடன் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. உலகில் வெப்ப மண்டல பகுதிகளில் இப்பழம் அதிகம் பயிரிடப்படுகிறது.

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படும் பழமாக இருக்கிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. டிராகன் பழம் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. டிராகன் பழம் உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.

உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் உதவுகின்றன.இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால், இவை உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்க, அதிகம் உணவு உண்ணுவதை தடுக்க உதவுகின்றன.டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது. இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணுவது நலம் தரும். வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மஞ்சள் பழங்களின் மகிமைகள்! (மருத்துவம்)
Next post வாழ்க்கையை வசீகரமாக்கும் வெந்தயமும் ஒரு வயகராதான்!! (அவ்வப்போது கிளாமர்)