பேபி பெயின் கில்லர்? (மருத்துவம்)
குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம்.
சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்னை, மன அழுத்தம் காரணமாக தலைவலி உண்டாகலாம். அதற்கு பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்.