சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்? (மருத்துவம்)
Read Time:1 Minute, 20 Second
பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கு அதிக அளவில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படுவதுண்டு.
தாய்க்கு ஏற்படும் சிறுநீரகத்தொற்று, வெள்ளைப்படுதல், பெண்ணுறுப்பைச் சுற்றி அரிப்பு போன்ற தொற்றுநோய்களும் இப்பிரச்னைக்கு மறைமுக காரணமாகின்றன. குழந்தைக்கு இதயத்தில் அல்லது மூளையில் இருக்கும் பிரச்னை காரணமாகவும் ஆக்ஸிஜன் குறைவாக கிடைக்கலாம்.
குழந்தை வெளிவரும் போது சில நேரங்களில் இயல்பை விட முன்னதாகவே நஞ்சுப்பை பிரிந்துவிடும். அது போன்ற நேரத்தில் குழந்தைக்கு சரியான அளவில் ரத்தம் கிடைக்காமல் மூச்சடைப்பு ஏற்படும். இதனால் குழந்தை அழாமல் இருக்கும்.