சுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண தோரணங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 51 Second

வீடு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ எதுவாக இருந்தாலும்  அதை அழகாக காண்பிப்பது நாம் அலங்கரிக்கும் கைவினைப் பொருட்கள்தான். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அழகாக நம்முடைய விருப்பம் போல் அலங்கரிக்கலாம். இதற்காக நாம் நிறைய செலவு செய்ய வேண்டும், கடை கடையாக ஏற வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் பயன்படாத பொருட்களைக் கொண்டே நம் வீட்டை அழகாக மாற்றி அமைக்க முடியும் என்கிறார் கைவினைக் கலைஞரான சுதா செல்வகுமார். இவர்  நூல்கண்டு சுற்றி வைக்கும் அடிபாகத்தைக் கொண்டு அழகான தோரணத்தை வீட்டில் இருந்தே  எப்படி வடிவமைக்கலாம்  என்று தோழியர்களுக்காக விவரிக்கிறார்.

தேவையான பொருட்கள்

1. வளையம் (Ring)- 2 சிறியது

2. கியர் ஒயர்- 2 மீட்டர் (உங்களுக்கு எவ்வளவு உயரம் வேண்டுமோ அதற்கு தகுந்தாற் போல் எடுத்துக் கொள்ளவும்.)

3.பிளாஸ்டிக் மணிகள்- பச்சை, சிவப்பு அல்லது உங்களுக்கு பிடித்த நிறங்கள் கொண்ட மணிகளை பயன்படுத்தலாம் ( தலா 50 கிராம்).

4.அலங்கரிக்க- கோல்டன் ஜரிகை, மணி ஜரி 2 மீட்டர்.

5.கண்ணாடி துண்டுகள், வட்ட வடிவம் (சிறியது, பெரியது) தலா 20 துண்டுகள்.

6.குஞ்சலம் (2), தோரணம் அடியில் தொங்கவிட.

7.நூல் கண்டு அடிபாகம் (அதாவது தையல் கடைகளில் நூல் தீர்ந்த பிறகு தூக்கி எறியும் (சிறிய குழாய் வடிவ) நூல்கண்டு சுற்றின பகுதி)- 12.

8.வெட்டுவதற்கு கத்தரிக்கோல், ஒட்டுவதற்கு பசை.

செய்முறை

ஸ்டெப் 1
நூல்கண்டு அடிபாகமான உருளை குழாயில் ஜரிகை (தங்க நிறம்) ஒட்டவும். பிறகு அதன் மேற் புறமும், கீழ்ப்புறமும் மணி ஜரிகை ஒட்டவும். அலங்கரித்த குழாய் நடுவில் சிறிய கண்ணாடி துண்டு ஒட்டி மேலும் அலங்கரிக்கவும். 12 நூல்கண்டு குழாயிலும் இது போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2
சிறிய வளையத்தில் கியர் ஒயரை கட்டவும். சிவப்பு மணி 3 கோர்க்கவும். பிறகு அலங்கரித்த குழாயை கோர்க்கவும். அடுத்து சிவப்பு மணி 3 கோர்க்கவும்.

ஸ்டெப் 3
பிறகு பெரிய கண்ணாடி துண்டை கியர் ஒயரில் ஒட்டி, அதன் கீழ் 3 பச்சை மணிகள் கோர்த்து, திரும்ப அலங்கரித்த குழாய் பிறகு மூன்று பச்சை மணிகள் என (படத்தில் காட்டியுள்ள படி) கோர்த்து கடைசியில் குஞ்சலம் கட்டி முடிக்கவும்.

பார்ப்பதற்கு அழகான, செய்வதற்கு சுலபமான, செலவு குறைந்த சுவர் அலங்காரம் தயார்.இதை சுவரில் ஆர்ச் வடிவில் வலது, இடது புறம் தொங்கவிடலாம். அல்லது நிறைய மணி தோரணம் செய்து (ஸ்கிரீன்) திரையாகவும் தொங்க விடலாம். அல்லது வாசலில் இரு பக்கமும் குஞ்சலத்திற்கு பதில் சிறிய மணி கட்டி தொங்க விடலாம். நம்முடைய கற்பனை திறனுக்கு ஏற்ப பிடித்த வண்ணத்தில் அலங்கரிக்கலாம். பார்க்க  பிரமாண்டமாகவும் அலங்காரமாகவும் இருக்கும். இதில் மணிகளின் நிறம் மற்றும் தோரணத்தின் உயரத்தை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

ஊஞ்சலாடுங்க…உற்சாகமாகுங்க!

சிறு வயதில் ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரத்தில் ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி சிறுவர், சிறுமியர்கள் விளையாடுவது வழக்கமாக இருந்து வந்தது. காலப்போக்கில் அது படிப்படியாக குறைந்து விட்டது. ஆனால் பழங்கால வீடுகளில் நடுக் கூடத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். இதனை எல்லாருடைய வீட்டிலும் பார்க்க முடியும். வீட்டுக்கு வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பது ஐதீகம். அதனால்தான் நம் தாத்தா, பாட்டி வீட்டில் எப்போதும் ஒரு ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கும். திருமணங்களிலும் ‘ஊஞ்சல் சடங்கு’ முக்கிய பங்கு வகித்து வருகிறது.  

இன்று எல்லாரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறி வருகிறோம். அதிலும் ஒரு சிலர் சிறிய ஊஞ்சல் ஒன்றை வீட்டில் அமைத்து வருகிறார்கள். சிலர் மூங்கிலில் கூடைனப் போன்ற அமைப்புள்ள ஊஞ்சலை விருப்புகிறார்கள். ஊஞ்சல் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கட்டும். ஊஞ்சல் ஆடுவதால் ஒரு சில நன்மைகள் ஏற்படும் என்பதை பலர் அறிந்திருப்பதில்லை.

*ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மனச் சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறும்.

*நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இருபக்க சங்கிலிகளையும் பிடித்துக் கொண்டு வேகமாக ஆடும்போது முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் சுத்தமான பிராணவாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். *தினமும் தோட்டத்திலோ அல்லது பூங்காவில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதய நோய் கட்டுப்படும். சாப்பிட்டவுடன் அரை மணி நேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க உதவுகிறது. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிராமிய வாழ்க்கையை பதிவு செய்யும் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள…!! (மருத்துவம்)