வாசகர் பகுதி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 36 Second

தினம் ஒரு பேரீச்சை!

*பேரீச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது.

*பேரீச்சம்பழத்தில் விட்டமின் பி-6, பி-12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

*இதில் இருக்கும் விட்டமின் பி-6, மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

*தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்களை நாம் உணரலாம்.

*தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடலிறக்கத்தைச் சீராக்கி, செரிமானம், வாய்வுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

*கர்ப்பிணிகள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், சுகப்பிரசவத்திற்குப்பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

*பேரீச்சம்பழத்திலுள்ள மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் துணை புரிகிறது.

எந்த சூப் எப்போது பருகலாம்!

*காளான் சூப் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

*காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமாக உள்ளவர்கள், தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டன் சூப் அருந்துதல் நலம்.

*கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு நெஞ்சு எலும்பு சூப்.

*பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தைக்கு வெஜ் பாயில் சூப்.

*கீரைகளைத் தவிர்க்க முயலும் குழந்தைகளுக்கு கீரை சூப் மற்றும் தக்காளி சூப்.

*எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, மட்டன் சூப் மற்றும் சிக்கன் சூப்.

*நார்மலாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, வெஜ் சூப்.

*தக்காளி சூப்பில் தாது உப்புகள் அதிகம். இது நோய் எதிர்ப்பு சக்தி தரவல்லது.

*மட்டன் சூப்பில் இரும்புச்சத்து, பி-12 போன்ற சத்துக்கள் உள்ளன.

*சிக்கன் சூப்பில் புரதம், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.

*அசைவ சூப்களை தொடர்ந்து குடிக்கக் கூடாது. இது கொழுப்புச்சத்தை அதிகரிக்கச் செய்து வேறு பிரச்னைகளைக் கொடுக்கும்.

அருமருந்தாகும் அன்னாசி!

*ஆஸ்துமாவைக் குணப்படுத்துவதில் இந்தப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.

*பொதுவாக ஆஸ்துமாவானது பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகள், ஒவ்வாத உணவுப் பொருட்கள், மலர்களின் மகரந்தம் போன்றவற்றினாலேயே ஏற்படுகிறது.

*அன்னாசிப்பழச் செடியின் தண்டில் ‘புரோமிலெயன்’ என்ற பொருள் ஆஸ்துமாவைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

*ஆஸ்துமாவினால் அதிகரிக்கும் வெள்ளையணுக்கள் உற்பத்தியை குறைத்துவிடும் தன்மை இந்த ‘புரோமிலெயன்’ பொருட்களுக்கு இருக்கிறது.

*நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதிலும் இந்த ‘புரோமிலெயன்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

*தூங்கப்போகுமுன் அன்னாசிப்பழத்தை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றில் கிடக்கும் வேண்டாத கிருமிகள் அழிந்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆரோக்கியம் காக்கும் வைட்டமின்!! (மருத்துவம்)
Next post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)