ஆணுறை யூஸ் பண்ணாம கர்ப்பமாவதை தடுக்க முடியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 11 Second

கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும். அதனால் ஆணுறையைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்போர் இந்த விஷயங்களைப் பின்பற்றினால், உங்கள் கவலைக்குத் தீர்வு கிடைக்கும்.

ஆணுறையைப் பயன்படுத்தாமல், எப்படி கருத்தரிப்பை தள்ளிப் போடுவது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு வழிகள் உண்டு. இவை நூறு சதவீதம் பயன்தராது என்றாலும் 90 சதவிதம் கைக்கொடுக்கும்.

சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்து உறவு கொள்ளுதல். அதாவது மாதவிலக்கு ஆரம்பிக்கப் போகும் முன் நான்கு நாட்களுக்குள்ளும், மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் வரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். இந்த காலகட்டங்களில் கரு பலவீனமுடையதாக இருக்கும். அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

காப்பர் – டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. மருத்துவரின் உதவியுடன் இதைப் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும்.

உடலுறவின் போது, ஆண்கள் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். உறவு கொள்ளும் போது, விந்தை பெண்ணுடைய உடலுக்குள் செலுத்தாமல், விந்து வெளியேறும் முன், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட வேண்டும். இந்த முறைப்படி, 80 சதவீதம் வரை கருத்தரிப்பை தடுக்க முடியும்.

முன்விளையாட்டுக்கள் மற்றும் வாய்வழி உறவு முறையில் மட்டும் ஈடுபட்டாலும் இன்பமும் கிடைக்கும். கருத்தரிப்பு அபாயமும் இருக்காது.

குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தால், குழந்தை போதும் என்று நினைத்தால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், ஆணுறையைப் பயன்படுத்தாமலே கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

திருமணமான புதிதில் தம்பதிகளின் மத்தியில் இருக்கும் பொதுவான பயம் இந்த கருத்தரிப்பு விஷயம் தான். ஏனெனில் அவர்கள் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்க்கை அனுபவிக்க வேண்டுமென நினைப்பதுண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாதஸ்வரத்தில் கலக்கும் பள்ளிச் சிறுமிகள்! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களுக்கு விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுவதன் காரணங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)