இதயத்தின் நண்பன் தாமரை! (மருத்துவம்)

Read Time:6 Minute, 54 Second

ஒரு சித்தா ரிப்போர்ட்!

தாமரையின் பூ, மகரந்தம், தண்டு, விதை, கிழங்கு என அனைத்துமே சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகின்றன. மனிதனின் முக்கியமான உறுப்பான இதயத்தின் நண்பனாக, தாமரைப்பூவைச் சொல்கிறார்கள்.

தாமரைப்பூ

தாமரைப்பூ வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள் என நான்கு வண்ணங்களில் மலரும்.  இது இனிப்பு, துவர்ப்பு என இரு சுவைகளைக்கொண்டுள்ளது. தாமரைப் பூ, குளிர்ச்சித்தன்மையுடையது.தாமரைப்பூவை உண்டுவந்தால் கண் எரிச்சல் நீங்கும். காய்ச்சலின் போது, தாமரைப் பூவால் தயாரித்த தேநீர் பருகலாம். நீர்வேட்கையையும் போக்கும். முக்கியமாக, வெண்தாமரைப் பூவைச் சாப்பிட்டுவர கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும். மருந்துகளை உண்ட உடலின் சூடு, நச்சுத்தன்மை நீங்கும்.

செந்தாமரைப் பூ, ரத்தத்தைச் சுத்தமாக்கும். குழந்தைகளுக்கு, பள்ளி மாணவர்களுக்குத் தாமரைப்பூ பொரியல், சூப் செய்து கொடுக்கலாம். இதனால் மூளைத்திறன் மேம்படும். தாமரைப் பூவை அடிக்கடி, அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இதய நோய்கள் வராது. வெண்தாமரைப் பூ சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்பு, கட்டுக்குள் வரும்.

தாமரைப்பூ டானிக்

தாமரைப்பூ –  ¼ கிலோ
மருதம்பட்டை – 100 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்.
தண்ணீரில் மேற்சொன்ன மூலிகைகளைப் போட்டு கொதிக்கவிட்டு கால் லிட்டராக வற்றவிடவும். இந்தக் கஷாயத்துடன் கால் கிலோ கருப்பட்டி போட்டு பாகுபதத்தில் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

இதயத் தொந்தரவுகள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் நாள்தோறும் இதைச் சிறிதளவு பருகி வரலாம். ரத்த மூலம் குணப்படுத்த உதவும். வயிற்றுப்போக்கை சரி செய்யப் பயன்படும்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு அருமை மருந்துஉலர்ந்த தாமரைப்பூ பொடி – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்.

தாமரைப் பூவை நன்கு உலர்த்தி காயவைக்கவும். சீரகத்தையும் நன்கு காயவைத்து பொடிக்கவும். இரண்டையும் தனித்தனியாகப் பொடித்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்துவைக்கவும்.

அரை ஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். உயர் ரத்த அழுத்த நோயாளிகள் சாப்பிட்டுவர தொந்தரவுகள் முழுமையாக நீங்கும்.

தாமரைப்பூ தேநீர்

தாமரைப் பூவைக் காயவைத்துப் பொடித்து, இதனுடன் மற்ற மூலிகை பூக்களான ஆவாரம் பூ, செம்பருத்தி, பன்னீர் ரோஜா ஆகியவற்றுடன் கலந்து பொடி செய்துவைத்து, டீயாக தயாரித்துக் குடிக்கலாம். ரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதய நோய்கள் குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாக அமையும்.

அனைவருக்குமே உடல் வலிமையைக் கொடுக்கும். தாமரை இதழ்களை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, பனை வெல்லம் சேர்த்து வடிகட்டிக் குடிக்க, உடல்சூடு குறையும். உடலில் உள்ள பித்தம் நீங்கும். தாமரைப் பூ இதழ்கள், பனங்கற்கண்டு, மிளகு, சுக்கு, சிறிது திப்பிலி சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.

தாமரைப்பூவின் மகரந்தம்

இந்த மகரந்தத்தைத் தேனுடன் அல்லது சர்க்கரை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டுவர, ஆண்மைக் குறைபாடு சரியாகும். காது கேளாமை பிரச்சனையிருப்போரும் சாப்பிட்டுவர தொந்தரவுகள் படிப்படியாகக் குறையும்.

தாமரை விதை

தாமரை விதையை உண்டுவர, ஆண்மைத் திறன் மேம்படும். நிலையின்மையால் பாதிக்கப்பட்டோருக்கும் பலன் கிடைக்கும்.தாமரை விதையைத் தோல் நீக்கி, அதன் பருப்பைப் பொடித்து ½ – 1 கிராம்  அளவுக்கு எடுத்து, பாலில் கலந்து இரண்டு வேளைக்குச் சாப்பிட்டு வர பிரசவித்த பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள் இந்த வைத்தியத்தைப் பின்பற்றிப் பயனடையலாம்.

தாமரை விதையைப் பொடித்து 1 – 2 கிராம் அளவுக்கு எடுத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு பலவிதங்களில் நன்மையை அளிக்கும். முக்கியமாக, வாந்தி, விக்கல் தொடர்பான பிரச்சனைகள் விலகும்.

தாமரைத் தண்டு

தாமரைத் தண்டை தாமரை வளையம் என்றும் சொல்கிறார்கள். இது நமது சித்த மருத்துவ மூலிகை தைலங்களில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

தாமரைத் தண்டு – குளிர்ச்சி எண்ணெய்
தாமரை தண்டு – ½ கிலோ
நல்லெண்ணெய் – ½ லிட்டர்.

தாமரைத் தண்டைச் சின்னச் சின்னதாக வெட்டி, 2 லிட்டர் தண்ணீருடன் கொதிக்க விட்டு, அதை அரை லிட்டராக வற்ற விடவும். பின்னர், அதில் நல்லெண்ணெய் விட்டு கொதிக்கவிட்டு, அடியில் மணல் பதம் வரும்வரை நன்கு கொதிக்கவிடவும். இதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவர உடல் சூடு தணிந்துவிடும். கண் சூடு நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மருந்தில்லா மருத்துவம்…!! (மருத்துவம்)
Next post ரங்கோலியில் தலைவர்களின் உருவங்கள்! (மகளிர் பக்கம்)