கட்டில் விஷயத்தில் பெண்கள் எப்பவுமே இந்த தப்புதான் பண்றாங்க…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 55 Second

ஆண்கள் சில எதிர்பார்ப்புகளுடன் பெண்களை நெருங்குகிறார்கள். ஆனால், பெண்களோ வேண்டுமென்றெ சில தவறுகளை செய்கிறார்கள். படுக்கையறையில், எல்லா பெண்களுமே பொதுவாக செய்கிற தவறுகள் சில உண்டு.

படுக்கையறையில், ஆண் முதலில் நெருங்கி வரலாம். ஆனால் பெண் முதலில் தன்னிடம் நெருங்கி வந்து தன்னுடைய விருப்பத்தைக் கூற வேண்டுமென ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படியிருப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் பெண்கள் எப்போதும் செய்வதே இல்லை.

பெண்களுக்கு பாலுறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதை ஆளிடம் வெளிப்படுத்துவதே இல்லை. அப்படி ஏதேனும் உங்களுக்கு விருப்பம் இருந்தால், பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஆணுக்கு முன்னால் போய், லேசாக உரசிக் கொண்டு நிற்பது போன்ற சின்ன சின்ன சீண்டல்கள் செய்தாலே போதும். உங்களுக்கு என்ன தேவை என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.

உறவின் போது, நீங்கள் உங்கள் துணைவரிடம் என்ன எதிர்பார்க்கிறீாகள் என்பதை ஒரு போதும் சொல்வதேயில்லை. ஆண்கள் உளவியல் அறிஞர்கள் எல்லாம் கிடையாது. என்ன சமயத்தில் பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று சரியாக புரிந்து கொண்டு அவர்களால், செய்ய முடியாது. இதுதான் தேவை என்பதை லேசாக உணர்த்திவிட்டாலே ஆண்கள் புரிந்து கொள்வார்கள்.

உடலுறவில் உண்டாகும் இன்பம் இருவரையும் பொறுத்தது தானே தவிர, அதில் ஆணுக்கு மட்டுமே பங்கு இல்லை. பெண்கள் உச்சத்தை அடையாததற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. பெண்களின் ஒத்துழைப்பும் அதில் மிக முக்கியம்.

உறவின் போது பெண்கள், இயந்திரத்தனமாக, சில சமயங்களில் எந்தவித செயல்பாடும் இல்லாமல், பொம்மையைப் போல் இருப்பார்கள். உடலுறவு இருவரும் இணைந்து செயல்படுவது. இருவருடைய முயற்சியும் இருந்தால் மட்டுமே அந்த உறவு இனிக்கும். சின்ன சின்ன குறும்புகள், முத்தம் இப்படி எதையாவது பகிர்ந்து கொண்டால் தான், அந்த உறவு இனிமையாகும்.

உடலுறவுக்குப் பின் ஆண்கள் மிகவும் சோர்வாகிவிடுவார்கள். சோர்வின் காரணமாக, அவர்கள் தூங்கிவிட்டால், கோபத்தால் எழுப்பாதீர்கள். அவர்கள் சோருவாக இருப்பார்கள்.

உடலுறவின் போது ஆண்களே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், உறவின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் இன்பமாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு என்ன வேண்டுமெனப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

பெரும்பாலான பெண்கள் உடலுறவைப் பற்றி மனம் விட்டுப் பேசுவதே இல்லை. அது அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பேசக்கூடாத கெட்ட வார்த்தை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு. இருவருக்கும் நேரம் கிடைக்கும் போது, இதைப்பற்றியும் கொஞ்சம் பேசிக் கொள்ளலாம். அப்போதுதான், உறவின்போத இருவருக்கும் உண்டாகிற தயக்கம் குறையும்.

உடலுறவில் ஈடுபடும்போது, எப்போதும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது சலிப்படையச் செய்துவிடும். சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக ஆண்கள் எதைாவது வழிமுறைகளைச் சொன்னால், அதையும் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால், அதை வெளிப்படையாக அவர்களிடம் சொல்லிவிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது! (மகளிர் பக்கம்)
Next post லிப்- லாக் கிஸ் எப்படி கொடுக்க வேண்டும்?… இதுலயாச்சும் கத்துக்கோங்க..!! (அவ்வப்போது கிளாமர்)