செக்ஸில் அடிக்ட்டாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 9 அறிகுறிகள்..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 21 Second

செக்ஸ்! இந்த வார்த்தையை பயன்படுத்தினாலே நமது சமூகத்தில் “அய்யோ, என்ன இப்படி எல்லாம் பேசறாங்க..” என்று தான் பார்ப்பார்கள். ஆனால், தெருக்களில், குழாயடி சண்டைகளில் பெண்களும், ஏகபோக சண்டைகளில் ஆண்களும் “அம்மா, ஆத்தா..” என்பதை கூட கெட்ட வார்த்தையாக பயன்படுத்துவார்கள்.

ஒருவர் செக்ஸில் / உடலுறவில் அடிக்ட்டாக இருக்கிறார் என்பதற்கு அந்த சமூகமும் தான் ஒருவகையில் பொறுப்பு. கற்றுக் கொடுக்க வேண்டியதை, உயிர்கள் மத்தியில் இயல்பான, இயற்கையான ஒன்றை செய்யத்தகாத செயல் என்ற முறையில் மூளையில் பதிய செய்வது தான் அவர்கள் அது என்ன என்று உற்றுநோக்கவும், அதில் மூழ்கவும் காரணியாக இருக்கின்றன.

இனி, செக்ஸில் ஒருவர் அடிக்ட்டாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்…
அறிகுறி #1
உடலுறவில் ஈடுபட்ட பிறகும் கூட சுய இன்பம் காண முயல்வது.

அறிகுறி #2
ஓர் ஆய்வில் செக்ஸில் அடிக்ட்டாக இருப்பவர்கள் எப்போதுமே நேரத்திற்கு அலுவலகம் செல்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறி #3
செக்ஸில் அதிக அடிக்ட்டாக இருப்பவர்கள் அதிகம் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட முயல்வார்களாம்.

அறிகுறி #4
செக்ஸில் ஒருவர் அதிக அடிக்ட்டாக மாறிவிட்டால் அவரால் அதை நிறுத்த முடியாது, பணம் செலவழித்தாவது அதை அனுபவித்துவிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கும்.

அறிகுறி #5
தொடர்ந்து டேட்டிங் செய்ய ஆசைப்படுவார்கள். ஒரு நபருடன் டேட்டிங் முடித்த மறுநாளே கூட வேறு நபருடன் டேட்டிங் செய்ய அவர்களது மனம் அலைபாயும்.

அறிகுறி #6
உடலுறவில் ஈடுபட முடியாவிட்டால், அவர்களுக்குள் எரிச்சல் அதிகரிக்கும். வேறு எந்த வேலையிலும் அவர்களால் நாட்டம் செலுத்த முடியாது.

அறிகுறி #7
செக்ஸில் அதிக நாட்டம் உள்ளவர்கள் அதிகமாக பொய் கூறுவார்கள். ஒரு பொய்யை கூறிவிட்டு, அதை மறைக்க பல பொய்கள் கூறுவார்கள்.

அறிகுறி #8
அவர்கள் செக்ஸில் அதிகம் ஈடுபடுவது, அடிக்க்ட்டாக இருப்பதை அவர்கள் பெருமிதமாக, ஆச்சரியமாக கருதுவார்கள்.

அறிகுறி #9
தங்கள் மடிக்கணினி மற்றும் மொபைல் பயன்படுத்தும் போது, யாருக்கும் தெரியாமல், பயன்படுத்துவது. யாரேனும், தங்களுக்கு தெரியாமல் இவற்றை தொட்டால் கூட சடாரென்று கோபித்துக் கொள்வது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனைவியுடன் குறைவான நேரம் உறவு கொண்டால் என்ன ஆகும் தெரியுமா.!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பட்ஜெட் உடைகள்தான் என் ஸ்பெஷாலிட்டி! லட்சுமி நம்பி!! (மகளிர் பக்கம்)