உடல் நீரிழப்பு குறித்து அறிந்துகொள்ளுங்கள்…!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 27 Second

தண்ணீரால் எதையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். பூமிக் கோளம் 71% தண்ணீரால் நிரம்பியுள்ளதை அறிவோம். ஆனால், நமது உடல் எடையில் மூன்றில் இரு பங்கு அல்லது 60% தண்ணீரால் ஆகியிருப்பதை அறிவீர்களா?

உங்கள் உடலிலுள்ள நீர் 1% – 2% குறைந்தாலும் அது நீரிழப்பிற்கு வழிவகுக்கும். எனவே உடலுக்கு தண்ணீர் முக்கியம் என்பதுடன் ஊட்டச்சத்துக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. உறுப்புகளின் இயக்கத்துக்கும், செரிமானத்துக்கும் அவசியமாகும்.

கோடைக் காலத்தில் அதிகமாகத் திரவப் பொருளை அருந்தினாலும், உடலிலிருந்து நீர்ச்சத்து அதிக அளவில் விரயமாகும். ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும், மூச்சுவிடும் போதும், சிறுநீர் கழிக்கும்போதும், நிமிடத்தின் ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் வெளியேறும். எனவே உடல் நீரிழப்பு(Dehydration) குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகளி
லிருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றியும், தெரிந்து கொள்வது அவசியமாகும்.

உடல் நீரிழப்பு என்றால் என்ன?

நீரிழப்பு என்பது உடலின் மொத்த நீர்ச்சத்து இழப்பு அல்லது குறைவு எனப் பொருள்படும். நாக்கு அல்லது தொண்டை உலர்தல் அல்லது பல கோப்பைகள் தண்ணீர் அருந்திய பிறகும் தாகம் எடுத்தால் உங்களுக்கு உடல் நீரிழப்பு பாதிப்புள்ளது என்று அர்த்தம். உடல் நீரிழப்பு பரவலாகக் காணப்பட்டாலும் அது பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

உடல் நீரிழப்பு என்பது தண்ணீர் இழப்பு மட்டுமல்ல. மலச்சிக்கல், சிறுநீர்ப் பாதை தொற்று, ஊட்டச் சத்துக் குறைபாடு, சிறுநீர் கழிப்பதை அடக்க இயலாமை, குழப்பம் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதயக் கோளாறு, தீவிர சிறுநீரக் கோளாறு, சிரைக் குருதி உரைக்கட்டி உள்ளிட்ட உயிரை அச்சுறுத்தும் நோய்களுக்கும் காரணமாகும்.

உடல் நீரிழப்புக்கான காரணிகள்

சிறுநீர் வழியாக மட்டுமே நீர் வெளியேறுவதில்லை. மூச்சுவிடுதல், வியர்வை மற்றும் மலம் கழிக்கும்போதும் உடல் தண்ணீரை இழக்கிறது. உடல் நீர்ச்சத்தை இழக்கும்போது உடனுக்குடன் தண்ணீர் அருந்தி சமன்படுத்த வேண்டும்.உடல் நீரிழப்புக்கான காரணிகள் பற்றி பார்ப்போம்…

வியர்வை

கோடையில் உடல் நீரிழப்பின் முக்கிய வடிவம் வியர்வை. காற்றிலுள்ள ஈரப்பதம் காரணமாகச் சருமம் வழியாக வியர்வை வடிவில் உடல் நீரை வெளியேற்றிப் புற வெப்பத்தால் ஏற்படும் விளைவைச் சமாளிக்கிறது. இதனால் உடல் நீரை இழக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் / வயிற்றுப் போக்கு

உணவிலிருக்கும் நீரைச் செரிமானத்தின் போது பெருங்குடல் ஈர்த்துக் கொள்கிறது. ஆனால், வயிற்றுப் போக்கு இதைத் தடுக்கிறது. நீங்கள் நீரிழிவு அல்லது சிறுநீரக நோயாளியாக இருப்பின் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதிக அளவில் உடலிலிருந்து நீர் வெளியேறுவதே உடல் நீரிழப்பிற்கு இட்டுச்செல்லும்.

வாந்தி

வாந்தி எடுத்தல் முக்கியக் காரணிகளுள் ஒன்றாகும். உடல் நீரிழப்பு ஏற்படுவதுடன் இதைச் சமன்படுத்த தண்ணீரை அருந்துவதும் இயலாமல் போகிறது.

காய்ச்சல்

உடல் தட்ப வெப்ப நிலை அதிகரிக்கும்போது அதைக் குறைக்கச் சருமத்தின் மேற்பரப்பின் வழியே வியர்வை வடிவில் நீரை வெளியேற்ற முயற்சிக்கும். அதிகம் வியர்க்கும் போது அதைச் சமன்படுத்த தேவையான தண்ணீரைக் குடிக்காவிட்டாலும், உடல் நீரிழப்பு ஏற்படும்.

உடல் நீரிழப்புக்கான நோய்க்குறிகள்

உடலிலுள்ள மொத்த நீர்ச்சத்தில் 1% குறைந்தாலும் நீரிழப்புக்கான அறிகுறிகள் அதிகரிக்கும். பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் உடல் நீரிழப்பைப் புரிந்து கொள்ளப் பல்வேறு நோய்க்குறிகளும், சமிஞைகளும் உள்ளன. அவை பின் வருமாறு:

பெரியவர்களிடம் காணப்படும் நோய்க்குறிகள்

*பல கோப்பைகள் தண்ணீர் அருந்திய பிறகும் தாகம் எடுக்கும்.
*அடிக்கடி சிறுநீர் குறைவாக வெளியேறும் அல்லது முற்றிலும் வெளியேறாமல் போகும்.
*மிதமான தலைவலி மற்றும் மயக்கம்; தலைசுற்றல் கூட.
*எச்சில் குறைவாக ஊறுவதால் வாய் துர்நாற்றம்.
*காய்ச்சல் மற்றும் குளிரெடுத்தல்
*தசைப் பிடிப்பு.
*இனிப்பு மீது ஆசை.

குழந்தைகளிடம் காணப்படும் நோய்க்குறிகள்

காய்ச்சல் அல்லது தாய்ப்பால் அருந்துவதில் சிக்கல் ஏற்பட்டால் குழந்தைகள் எளிதில் உடல் நீரிழப்புக்கு உள்ளாவார்கள். இதற்கான நோய்க்குறிகள்…

*கரு மஞ்சள் அல்லது ஆரஞ்ச் வண்ணங்களில் சிறுநீர் கழித்தல்.
*வாய், நாக்கு மற்றும் உதடுகள் உலர்தல்.
*தலை உச்சியில் லேசான குழி.
*24 மணி நேரத்தில் குறைந்த அளவில் ஈர டயபர்கள்.
*அழும்போது கண்ணீர் வராமை.
*வெளிர் நிற அல்லது சுருங்கிய சருமம்.
*மலச்சிக்கல்.
*எரிச்சல்.

சிகிச்சை வாய்ப்புகள்

உடல் நீரிழப்புக்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அதிக அளவில் தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் அருந்தி இழப்பைச் சரிக்கட்ட வேண்டும்.

பெரியவர்களுக்கான சிகிச்சைகள்

*எலெக்ட்ரோலைட் மாத்திரைகள் உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர்ச்சத்தைத் தரும்.
*எலெக்ட்ரோலைட் பவுடர் உடல் இழந்த நீர்மத்தையும், எலெக்ட்ரோலைட்டையும் மீட்டெடுக்கும்.
*ஓஆர்எஸ் பானங்கள் எலெக்ட்ரோலைட் மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
*கடுமையான உடல் நீரிழப்பால் பாதிக்கப்படும் போது நரம்பு வழியாக ரத்த நாளத்துக்குள் நீர்மம் செலுத்தலாம். விரைவில் குணமடைய உதவும்.

சிறுவர்களுக்கான சிகிச்சைகள்

சிறுவர்களைப் பொருத்தவரை உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது நலம். இருப்பினும் மிதமான உடல் நீரிழப்பை சமன்செய்ய கீழ்க்காணும் முறைகள் உதவும்:

*போதிய அளவு தண்ணீர் தரலாம்.
*ஓஆர்எஸ் பானங்கள்.
*எலுமிச்சைச் சாறு.

உடல் நீரிழப்பைக் கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் பல வழிகள் இருப்பினும், தடுப்புமுறை மிகவும் முக்கியமாகும்.சில வழிகளைப் பின்பற்றி உடல் நீரிழப்பைத் தடுக்கலாம்.

*அடிக்கடி, போதிய இடைவெளியில் அதிக அளவு தண்ணீர் அருந்தவும்.
*பூசணி மற்றும் சுரைக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்துள்ள காய் கனிகளை உட்கொள்ளவும்.
*மது குடிப்பதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.
*உடல் நீரிழப்புக்கு புகைபிடித்தல் காரணம் என்பதால் தவிர்க்கவும்.
*கரியமில வாயு கலந்த குளிர்பானங்களைத் தவிர்த்தல்.

மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றிக் கோடையில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள். ஏதேனும் கடுமையான உடல் நீரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்கள் உடலுறவை விட அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post யுடியூபில் கோலங்கள் வரைந்து மாத வருமானம் ஈட்டலாம்! (மகளிர் பக்கம்)