வெந்நீரின் மகத்துவம்! (மருத்துவம்)

Read Time:2 Minute, 2 Second

*எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால், வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், செரிமான பிரச்சனை ஏற்பட்டால், வெந்நீர் அருந்தினால் பலன் தரும்.

*பூரி போன்ற உணவுகள் உண்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு சூடாக ஒரு தம்ளர் வெந்நீரை மெதுவாக அருந்தினால் நெஞ்செரிச்சல் குறையும்.

*சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு, சீரகத்தை நன்கு வறுத்து பொடித்து அதை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கலாம்.

*ஐஸ்கிரீம் சாப்பிட்டதும், உடனே வெந்நீர் குடித்தால், தொண்டையில் அழற்சி ஏற்படாது.

*வெயிலில் வெளியே சென்று வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பதற்கு பதில் வெந்நீர் அருந்தினால் தாகம் தணியும்.

*கால் பாதங்களில் வலி அழற்சி மற்றும் வெடிப்பு இருந்தால், வெந்நீரில் கல் உப்பு போட்டு பத்து நிமிடம் கால்களை வைத்தெடுத்து அதில் கடுகு எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து புத்துணர்வு பெறும்.

*தொண்டை வலி, கரகரப்புக்கு வெந்நீருடன் கல் உப்பு அல்லது தேன் சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளித்தால் இன்பெக்‌ஷன் குறையும்.

*வெந்நீருடன் மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை வலி குணமாகும்.

*தூக்கம் வராமல் இருப்பவர்கள் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தினால், உறக்கம் நன்றாக வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதயத்தின் கேடயமாக மாறும் மசாலாக்கள்!! (மகளிர் பக்கம்)
Next post டயாபடீக் டயட்!! (மருத்துவம்)