
பனங்கற்கண்டின் பலே நன்மைகள்! (மருத்துவம்)
பனங்கற்கண்டு நிறைந்த மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக்கேண்டி என்பர். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும். பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே பனங்கற்கண்டு என்று அழைக்கின்றனர்.
பனங்கற்கண்டில் குறைந்த அளவே இனிப்பு சுவை இருப்பதால் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்னை, இருமல் , சளி, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்னை போன்றவற்றிற்கு பனங்கற்கண்டு நல்ல மருந்தாகிறது. பயன்கள்: பனங்கற்கண்டை வாயில் வைத்துக் கொண்டு அதன் உமிழ்நீரை விழுங்கி வர, தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் போன்றவற்றை சரி செய்கிறது.
கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.அரை தேக்கரண்டி பசுநெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகும். 2 பாதாம் பருப்பு, 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு, அரை தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.
அரை தேக்கரண்டி மிளகுத்தூள் அரை தேக்கரண்டி நெய் மற்றும் அரை தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, தொண்டை வலி குணமாகும்.
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.
பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வர, எந்த நோயும் அண்டாது.
1 தேக்கரண்டி வெங்காய சாறு மற்றும்
1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட, சிறுநீரகக் கற்கள் கரையும்.