பாதங்களை பாதுகாக்கும் நியூட்ரல் ஃபுட் பாத்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 45 Second

யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா

நீர் சிகிச்சை என்பது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியாகும். இதில் பலவிதமான நீர்சிகிச்சை இருக்கின்றன. அதில் கால்களுக்கான நீர்சிகிச்சை முறையும் அதன் பயன்கள் குறித்தும் விளக்குகிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகாமருத்துவ மொழியில், நியூட்ரல் ஃபுட் பாத் எனும் இந்த நீர்சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்போது, பலவிதமான நன்மைகளும் உடலில் ஏற்படும் பலவித பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.

வெதுவெதுப்பான நீரில் 10 – 20 நிமிடம் வரை கால்களை ஊறவைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பார்ப்போம்:

நீர் சிகிச்சை செய்யும் முறை: நியூட்ரல் ஃபுட் பாத் எனும் இந்த நீர்சிகிச்சைக்கு, கால் சூடு பொறுக்குமளவு கால் பக்கெட் சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 தேக்கரண்டி கல் உப்பு அல்லது 1 தேக்கரண்டி சோடா உப்பு அல்லது 1 தேக்கரண்டி நீலகிரித் தைலம் ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ள வேண்டும். பின்னர், கால்களை சுத்தமாக கழுவிவிட்டு, சுடுதண்ணீரில் 10-20 நிமிடம் வரை வைத்திருந்து எடுக்க வேண்டும். பின்னர் கால்களை நன்றாக துடைத்துவிட்டு, தேங்காய் எண்ணெயை தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குதிகால் வெடிப்பு பிரச்னையும் சரியாகும்.

தலைவலி: வெளியில் சென்று வருவதனால் ஏற்படும் தலைவலியோ அல்லது சளி தொந்தரவினால் ஏற்படும் தலைவலியோ அல்லது மன அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலியோ அல்லது மைக்ரைன் என்று சொல்லும் ஒற்றைத் தலைவலியாக இருந்தாலும் சரி இந்த ஃபுட் பாத் எனும் காலுக்கான நீர்சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது நல்ல நிவாரணம் தெரியும்.

தூக்கமின்மை : நிறையபேர் அடிக்கடி சொல்லும் வார்த்தை சரியான தூக்கமே இல்லை என்பதுதான். சிலர் தூங்குவதற்காக மாத்திரைகள் கூட எடுத்துக் கொள்வார்கள். சிலர், பாதி ராத்திரியில் எழுந்துவிட்டால் அதன்பின்னர், தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். அவர்கள் எல்லாம் இதுபோன்ற நியூட்ரல் ஃபுட் பாத் எடுத்துக் கொள்ளும்போது நல்ல தூக்கம் வரும். மேலும், ஃபுட் பாத் எடுத்து முடிந்தவுடன் ஆழ்ந்த சுவாசத்துக்காக, மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு 6- 10 முறை செய்துவிட்டு படுத்தால், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். அதன்பின் தூக்கத்திற்காக மாத்திரைகள் எடுக்க வேண்டிய தேவைகள் இருக்காது. இதை தொடர்ந்து செய்துவரும்போது, மாத்திரையின் அளவுகளை குறைத்துக்கொள்ளலாம். நாளடைவில் மாத்திரையை நிறுத்தவும் செய்யலாம்.

குதிகால் வலி: பொதுவாக, பெண்கள்தான் நிறைய அளவில் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் இந்த நியூட்ரல் ஃபுட் பாத் எடுத்துக்கொண்ட பிறகு, கால்களை துடைத்துவிட்டு, ஆங்கிள் ஜாயின்ட் என்று சொல்லும் கணுக்கால்களை மேலும், கீழுமாக இடது , வலது புறமாகவும் 5-6 முறை அசைக்க வேண்டும். பின்னர், கிளாக் வைஸ், ஆன்டி கிளாக் வைஸ் கால்களை 5-6 முறை சுழற்ற வேண்டும். பின்னர் கால்களை மேலே தூக்கி வைத்து, கைளால் உள்ளங்காலில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தினமும் தூங்குவதற்கு முன் செய்து வந்தால், நாளடைவில் குதிகால் வலி நன்கு குறையும்.

அதுபோன்று குதிகால் வலி இருப்பவர்கள், காலை எழுந்தவுடன் கால்களை கீழே ஊன்றாமல், மேலே சொன்னதுபோலவே, கால்களுக்கான பயிற்சிகளை செய்துவிட்டு உள்ளங்காலில் கை கட்டைவிரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நல்ல நிவாரணம் கிடைப்பதை நன்கு உணர முடியும்.

மன அழுத்தம்: அதிகளவில் மன அழுத்தமாக இருப்பது, பதற்றமாக இருப்பது , மன இறுக்கமாக இருப்பது. அலுவலக டென்ஷன் அதிகமாக இருப்பது போன்ற நேரங்களில் இந்த ஃபுட் பாத்தை 20 நிமிடம் எடுக்கலாம். இவ்வாறு எடுத்துக்கொள்ளும்போது, நல்ல ரிலாக்சேஷன் கிடைப்பதை உணரலாம்.

பொதுவாக, நமது உள்ளங் காலில் எழுபத்திரண்டாயிரம் நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. அதனால், இதுபோன்ற ஃபுட் பாத் எடுத்துக் கொள்ளும்போது, நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைத்து நல்லவிதமாக செயல்படும். இதன்மூலம் ரத்தம் ஓட்டமும் சீராகும். எளியமுறையிலான இந்த ஃபுட் பாத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, மேலே சொன்னது போன்று தலைவலி, தூக்கமின்மை, குதிகால்வலி, மன அழுத்தம் எல்லாவற்றுக்குமே விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். முயற்சிசெய்து பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முடத்தை குணமாக்கும் முடக்கறுத்தான் கீரை! (மருத்துவம்)
Next post பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது இவ்வளவு ஈஸியா…?..!! (அவ்வப்போது கிளாமர்)