அதை செய்துவிட்டு உறவு கொள்ளலாமா ?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 43 Second

ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், அதை மேலும் இன்பமாகக் கொண்டாடவே மனம் விரும்பும். இது மனித இயல்பு, இந்த நிலையில், எண்ணெய் தேய்த்து குளித்த அன்று தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா? அல்லது கூடாதா? எனப் பலருக்கும் பெரும் சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

அதுவும் நல்லெண்ணெய் தேய்து குளிப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். தலைக்கு மட்டும் இன்றி உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். சனி மற்றும் புதன் ஆகிய இரு கிழமைகளில் ஆண்கள் நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். அது போல், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

குறிப்பாக, காலை 5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் சிறந்தது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்க வேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை உள்பட மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு, நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். உடனே சென்று தூங்க கூடாது, குளிர்சியான பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ் க்ரீம் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களும் கட்டாயம் சாப்பிடக் கூடாது. அதிலும், ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் குறிப்பாகக் கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவை (Sex) வைத்துக் கொள்ளவே கூடாது என்றும், மற்ற நாட்களில் விருப்பம் போல உறவு வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு கருத்து தமிழகத்தில் உள்ளது.

இது தவறான கருத்து. மகிழ்ச்சியான மனநிலையில் உள்ள தம்பதிகள் தாம்பத்திய உறவை எப்போதும் தள்ளிப் போடக் கூடாது. அதன் மூலம் கிடைக்கும் இன்பமும் ஏதாவது ஒரு காரணத்தினால், தள்ளிப் போனால், அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதுடன் மன அழுத்தம் ஏற்படும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, எப்போது மனம் விரும்புகின்றதோ, அப்போது, காலச் சூழ்நிலை ஏற்ப, உடல் ஒத்துழைப்புக்கு ஏற்ப அப்போது மகிழ்ச்சியோடு இன்ப விளையாட்டை துவக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் அம்ரித்! (மருத்துவம்)
Next post தினமும் உறவில் ஈடுபடலாமா?… அப்படி ஈடுபட்டால் இவ்வளவு நன்மையா..?..!! (அவ்வப்போது கிளாமர்)