கண் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் அம்ரித்! (மருத்துவம்)
மனித உடலில் மிகவும் அழகான படைப்பு கண்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதும் கண்கள் மட்டுமே. எனவே, ஒவ்வொருவரும் தங்களது கண்களை பாதுகாக்க வேண்டியது அவசியமானது. அந்தவகையில், கண்களின் முக்கியத்துவம், கண் நோய்கள் மற்றும் சிகிச்சைகள் போன்ற கண் மருத்துவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார் அம்ரித் கண் மருத்துவமனையின் அனுபவம் வாய்ந்த சிறப்பு மருத்துவர் லலித்குமார். அவர் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1994 இல் செளக்கார்பேட்டை பகுதியில் உள்ள மக்களின் மருத்துவ தேவைக்காக, மருத்துவர்களான எனது பெற்றோர் சோகன்ராஜ் மற்றும் விமலா சோகன்ராஜ் இருவரும் இணைந்து இந்த அம்ரித் மருத்துவமனையை தொடங்கினர். இதில், கண், மகப்பேறு, குழந்தைகள், எலும்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் என அனைத்துப் பிரிவுகளும் உண்டு. தற்போதும் 50 படுக்கைகளை கொண்டு இந்த மருத்துவமனை மக்களுக்காக இயங்கிவருகிறது.
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் புரசைவாக்கத்தில், அம்ரித் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தொடங்கினோம். இங்கே கார்டியாலஜி, நெப்ராலஜி முதல் கொண்டு அனைத்து வசதிகளும் உண்டு. இதைத் தொடர்ந்து கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு எக்மோர் பகுதியில், அம்ரித் லேசிக் ஐ சர்ஜரி சென்டர் தொடங்கினோம். இங்கே முழுக்க முழுக்க கண் மருத்துவத்துக்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கி வருகிறோம். தற்போதுள்ள அதிநவீன தொழில் நுட்பங்களான ரோபாடிக் கேட்ராக் சர்ஜரி, ஸ்மைல் சர்ஜரி, கான்த்துரா லேசிக் சிகிச்சை, எம்.ஐ.சிஎஸ் சர்ஜரி போன்ற அனைத்துவிதமான சிகிச்சைகளும் உள்ளன.
மேலும், கண்ணாடியை அகற்ற, கண் பிரஷருக்கு, குளுக்கோமாவிற்கு, ரெட்டினா பிரச்னைகளுக்கு, கான்த்துரா லேசிக், ஏர் லேசர், கிரீன் லேசர் போன்ற 10 விதமான லேசர் சிகிச்சையும் இருக்கிறது. குறைந்த செலவில், வெளிநாடுகளுக்கு இணையான நவீன டெக்னாலஜிகள் இங்கே பயன்படுத்தப்படுவதால், இலங்கை, மலேசியா, லண்டன் போன்ற உலகத்தின் எந்த மூலையில் இருந்தும், நோயாளிகள் இங்கே வந்து சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பிச் செல்கின்றனர். இங்கே சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் ஆன்லைன் மூலமாகவும் எங்களை அணுகலாம். பழைய ரிப்போர்ட் இருந்தால் அதை அனுப்பி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் அல்லது தொலைபேசி மூலமாகவும் அணுகலாம்.