வெந்தய தோசை!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 5 Second

*வெற்றிலை காம்புகளை இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது மாவில் சேர்த்து அரைத்தால் புளிக்காது.

*கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

*சாம்பார், கீரை, கூட்டு ஆகியவற்றைத் தயார் செய்து, வெந்தய பொடி தூவி இறக்கினால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

*வீட்டில் காய்கறிகள் வைக்கும் கூடையில் ஸ்பாஞ்ச் வைத்தால் காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

– சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்.

*இடித்த மிளகாய் பொடிக்குப் பதிலாக மைய அரைத்த ரெடிமேட் மிளகாய்த்தூளை கலந்து வதக்கினால் மாங்கா தொக்கு வழுவழுப்பாக இருக்கும்.

*கொதிக்க விட்டு இறக்கி வைத்து பின்னர் அதில் பெருங்காயமிட்டு மூடி வைத்தால் ரசம், சாம்பார் எல்லாம் மணம் பெருக்கும்.

*பாயசத்தில் கடலைப்பருப்பை முழுசாகப் போடாமல் வறுத்து மிக்சி மூலம் துகளாக்கி கலந்து போட்டால் பாயசம் தனிச்சுவையாக அமையும்.

– என். பர்வதவர்த்தினி, பம்மல்

*நான்கு அல்லது ஐந்து லட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அரை லிட்டர் பாலைச் சுண்டக் காய்ச்சி அரைத்த விழுதை பாலில் கலந்து சூடாகச் சாப்பிடலாம். ஃபிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் உள்ளே வைத்து ஜில்லென்று சாப்பிட, லட்டு பாஸந்தி வெகு ஜோர்.

*பலவிதமான காய்களைப் போட்டு மோர்க்குழம்பு வைத்திருப்பீர்கள். மாறுதலுக்கு தக்காளி போட்டு செய்து பாருங்கள். இதற்கு புளித்த மோர் சேர்க்கவேண்டாம்.

*மைதா மாவுடன் ரவை கலந்து தோசை வார்க்கும் போது உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிக்காய் இவற்றைத் துருவிப் போட்டு வார்த்தால் ருசி அதிகமாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

*மில்க் குக்கரில் பால் காய்ச்சுவது போல சாதமும் வடிக்கலாம். ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு சாதம் வைத்தால் மல்லிகைப் பூ போல பலன்
கிடைக்கும்.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* பாகற்காய் குழம்பு செய்யும் போது மாங்காய்த் துண்டு, வெல்லம் சேர்த்தால், கசப்பு குறைந்து புளிப்பும், இனிப்பும் சேர்ந்து சுவை கூடும்.

* வற்றல் குழம்பு செய்கையில் ஏதாவதொரு வடகத்தைப் பொரித்து, நொறுக்கி சேர்த்தால் குழம்பு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

*அடைக்கு அரைக்கும்போது ஒரு கேரட்டை துருவி போட்டு அரைத்து அடை வார்த்தால் அடை நல்ல நிறத்துடனும், சுவையாகவும் இருக்கும்.

*ரவையை உப்புப் போட்டு பிசிறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அது பிரமாதமாக இருக்கும்.

*குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும், கெட்டுப் போகாமலும் இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*இடியாப்ப மாவுடன் சிறிது உப்பு, நெய் சேர்த்து பிசறிவிட்டு, பின் கொதித்த வெந்நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து பிறகு பிழிந்தால் ஈசியாக இருக்கும். வெந்ததும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் நூல் போல் வரும்.

*கட்லெட், சமோசா, போண்டா போன்றவைகளை தயாரிக்க வைத்திருக்கும் பொருட்களுடன் செலரி இலை வீட்டிலிருந்தால் பொடியாக கட் பண்ணி சேர்த்தால் நல்ல வாசனையாகவும்
ருசியாகவும் இருக்கும்.

*ஆலு பரோட்டா செய்யும் போது சிறிது ஓமம் சேர்த்து செய்தால் வாயு பிடிப்பு வராது.

– மாலா பழனி ராஜ், சென்னை.

*வெந்தய தோசையின் மீது மிளகு, சீரகம் இரண்டையும் பொடி செய்து மேலே தூவி நல்லெண்ணெய் லேசாக ஊற்றி தோசை வார்த்தால் சுவையோ சுவை.

*டீ தூளுடன் ஏலக்காய், சுக்கு, இரண்டையும் பொடி செய்து டீ போட்டால் டீ சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

*காய்கறிகளை வெதுவெதுப்பான நீரில் அலசிய பின் சமையலுக்கு பயன்படுத்துங்கள். இதனால் பல நோய் கிருமிகள் அழிந்துவிடும்.

– கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

*கூட்டு வகைகளுக்கு உடைச்ச கடலை, சோம்பு, கசகசா இம்மூன்றையும் சேர்த்து பொடி செய்து இறக்கும் முன்பு தூவி இறக்கினால் கெட்டியாக இருக்கும்.

*மேகி செய்து மீந்துவிட்டால் அத்துடன் கடலை மாவு கலந்து உப்பு, காரம், இஞ்சி, பூண்டு சேர்த்து உருண்டை பிடித்து பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி.

– ஆர். சுசிலா ரவி, சோளிங்கர்.

ஸ்டஃப்டு ரைஸ் பராத்தா!

தேவையானவை:
கோதுமை மாவு – 4 கப்,
வேகவைத்த சாதம் – 1/2 கப்,
ஓமம் – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியாதூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 1/4 கப்,
எண்ணெய், உப்பு,
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை : ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். மற்ெறாரு பாத்திரத்தில் வேகவைத்த சாதம், ஓமம், மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், சீரகத்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். சப்பாத்தி மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து அதற்குள் தயார் செய்து வைத்துள்ள மசாலாக்களை வைத்து மூடி, சப்பாத்தியாக தேய்த்து தோசைக்கல்லை சப்பாத்தி போல் இரண்டு பக்கம் எண்ணெய் சேர்த்து சுடவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடற்கரை மணலில் இயற்கை விவசாயம்! (மகளிர் பக்கம்)
Next post ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..!! (அவ்வப்போது கிளாமர்)