ஒரே ஊசி முனையால் அழகாக மாறும் சருமம்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 30 Second

ஒருவரின் இளமையான தோற்றத்திற்கு அங்கீகாரம் அவரின் சருமம். வயதில் சின்னவராக இருந்தாலும், சருமத்தில் சுருக்கம், புத்துணர்ச்சி இல்லாமல் இருந்தால் அவர்களை வயதானவர்களாக எடுத்துக்காட்டும். அதனாலேயே சினிமா நடிகைகள் மட்டுமில்லாமல் சாதாரண பெண்கள் உட்பட அனைவரும் தங்களின் சரும அழகின் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சருமத்தில் எந்த ஒரு குறைபாடு இல்லாதவர்களே தங்களின் சருமத்தில் சின்ன முகப்பரு தோன்றினாலே மிகவும் கவலைப்படுபவர்கள் மத்தியில் சருமத்தில் தீக்காயம் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிப்பு ஏற்பட்டவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். அவர்களின் மனக்கவலையை நீக்கி, அவர்களுக்கும் அழகான சருமத்தினை மீட்டு தர முடியும் என்கிறார் டாக்டர் தீபிகா. இவர் சென்னையில் ‘பயனியர் ஸ்கார் ரிமூவல்’ என்ற பெயரில் சரும சிகிச்சை மையத்தினை நிர்வகித்து வருகிறார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். +2 முடிச்சிட்டு, ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றேன். அதன் பிறகு லண்டனில் ‘காஸ்மெடிக் டெர்மடாலஜி’ குறித்து படிச்சேன். இது முகம் மற்றும் உடல் அழகு சார்ந்த பட்டப்படிப்பு. ‘தி மெடிக்கல் பார்க்’ என்ற ஏஜ் மேனேஜ்மென்ட் – எனர்ஜி கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஜெயப்பிரகாஷ் அவர்களிடம் ஏஜ் மேனேஜ்மென்ட் குறித்த பயிற்சி பெற்று வருகிறேன். இதன் மூலம் பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் அனைத்து விதமான அதிநவீன அழகு சிகிச்சைகள் அளித்து வருகிறேன்.

எங்க கிளினிக்கில் சருமம் சார்ந்து அனைத்து விதமான சிகிச்சைகளை அளித்து வருகிறோம். குறிப்பாக எந்த வித அறுவை சிகிச்சை இல்லாமல் முகம், கை, கால் மட்டுமில்லாமல் உடல் முழுதும் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கான சிகிச்சையினை அளிக்கிறோம். இதன் மூலம் அவர்கள் முழுமையாக குணமடைவதற்கான தீர்வும் அளிக்கிறோம். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் முற்றிலும் குணமடைந்த பிறகு சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.

அதுமட்டுமில்லாமல், குழந்தைபேறுக்கு பிறகு பெண்களின் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் தொய்வடையும். சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்படும் தழும்புகள், கண்களை சுற்றி உண்டாகும் கருவளையங்கள், பருக்கள், மருக்கள், மச்சங்கள், வயதான காரணத்தினால் ஏற்படும் சரும சுருக்கம், அடிபட்ட தழும்புகள், அம்மை தழும்புகள் என அனைத்திற்கும் தனிப்பட்ட சிகிச்சை அளித்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் பச்சை குத்தி இருப்பதையும் எந்த வித சரும பாதிப்பின்றி நீக்க முடியும். பெண்களுக்கு மார்பக அழகுபடுத்துதல், முழங்கைக்கு கீழே சதை தொங்குவதை சரிசெய்தல், எக்ஸிமா போன்ற சரும நோய்களை குணமாக்குவது போன்ற சிகிச்சைகளும் உண்டு’’ என்றவர் அதிநவீன சிகிச்சை குறித்து விவரித்தார்.

‘‘இந்தியாவிலேயே முதன் முதலாக ஆபரேஷன் இல்லாமல் சரும பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் தீர்வு காண்பதற்கு நாங்க பின்பற்றும் சிகிச்சை முறை ‘பிளாஸ்மா பென்’ மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சைதான். பிளாஸ்மா பென் சிகிச்சையில் பேனா போன்ற வடிவில் சின்ன ஊசி போல் இருக்கும். பிளாஸ்மா பென் என்பது அதிநவீன மருத்துவ டெக்னாலஜி முறை. இது மின்னல் முறையில் செயல்படும். பிளாஸ்மா பென்னின் முனை ஊசி போல் கூர்மையாக இருக்கும். இந்த பேனா ஐயர்னைசேஷன் முறையில் செயல்படுவதால், சருமத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை நீக்க உதவுகிறது.

பின் விளைவுகள் ஏதுமின்றி ஐந்து அல்லது ஏழு நாட்களில் பலன் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிகிச்சையில் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் இது குணப்படுத்துகிறது. ஸ்டெம்செல்கள் குழந்தை பிறக்கும் போது அதன் தொப்புள்கொடியில் இருந்து எடுக்கப்படும் அணுக்கள். இதில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதால், மூட்டு வலி, முதுகு வலி, மூளை பாதிப்பில் உண்டாகும் பக்கவாதம், நுரையீரல், இதய நோய்கள் மற்றும் சரும பாதிப்புகள் அனைத்தையும் சரி செய்கிறது. அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை மூலம் சருமத்திற்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்தினை உள் செலுத்தி பாதிப்புகளை சரி செய்ய முடியும்.

இந்த சிகிச்சை முறைகளை 16 வயது இளம் பெண் முதல் 86 வயது பாட்டிகள் வரை செய்து கொள்ளலாம்’’ என்றவர் தீர்க்க முடியாத சரும பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு அளித்துள்ளார்.
‘‘ஒரு முறை கிளினிக்கிற்கு ஆப்பிரிக்காவில் இருந்து நடுத்தர வயதினை தாண்டிய ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதி தீ விபத்தினால் கருகி இருந்தது. தீக்காயத்தினால் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் கழுத்தை கூட திருப்ப முடியாமல் தவித்துள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்ற போது ஐந்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்தால் தான் கழுத்தை திருப்ப முடியும் என்றனர். அதனால் இந்தியாவில் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையை அணுகிய போது ஏழு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றனர். அறுவை சிகிச்சை இல்லாமல் இதற்கான தீர்வினை அடைய முடியாது என்று மிகவும் மனம் நொந்த நிலையில் தான் எங்களை அணுகினார். நாங்க அவருக்கு லேசர், ஸ்டெம்செல் மற்றும் பிளாஸ்மா பென் சிகிச்சை அளித்தோம். இப்போது அவர் முற்றிலும் குணமாகியுள்ளார். எங்களின் முக்கிய நோக்கம் பல லட்ச ரூபாய் செலவாகும் இதுபோன்ற அதிநவீன சிகிச்சையினை குறைந்த செலவில் செய்ய வேண்டும் என்பதுதான்’’ என்றார் டாக்டர் தீபிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒரு சித்திரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! (மகளிர் பக்கம்)
Next post கலைமாமணி விருது வாங்க வேண்டும்! (மகளிர் பக்கம்)