மஞ்சள் முகமே வருக…!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 19 Second

பெண்களுக்கு முக அழகு முக்கியம். சாதாரண அழகுள்ளவர்கள் கூட பளிச்ெசன்று மேக்கப் செய்துகொண்டால் அழகாக தோன்றலாம். அதற்கு சில எளிய டிப்ஸ்…

* உருளைக்கிழங்கு சாற்றுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, பின்பு கழுவினால் முகம் அழகாக மாறும்.
* இளஞ்சூடான பாலுடன், ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
* நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாறை முகத்தில் தேய்த்தால் வடுக்கள் மாறி, முகம் பொலிவு பெறும்.
* தயிரை முகத்தில் பூசி, ஊற வைத்து பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகும்.
* கசகசாவை ஊற வைத்து அரைத்து, முகத்தில் பூசி, முப்பது நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் முக சுருக்கங்கள் மறையும்.
* பாலேட்டை நன்றாக தேய்த்து, ஊற விட்டு முகம் கழுவினால் மென்மையுடன் பிரகாசமாகும்.
* காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் பூசி, அரைமணி நேரம் ஊற வைத்து, கழுவினால் முகம் பளபளப்புடனும், மிருதுவாகவும் இருக்கும்.
* கடலை மாவுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்பு குளித்து வந்தால் முகம் நல்ல நிறமாக மாறும்.
* தக்காளியை இரண்டாக நறுக்கி, முகத்தில் தேய்த்து, உலர வைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
* வெள்ளரி சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று புத்துணர்வுடன் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடையைச் சமாளிக்க… ஜில் டிப்ஸ்! (மருத்துவம்)
Next post டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)