கோடையைச் சமாளிக்க… ஜில் டிப்ஸ்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 14 Second

கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. இப்போது அனல்காற்றும் சேர்ந்து வாட்டி எடுக்கிறது. இரவு நேரங்களில்கூட வெப்பம் குறையாமல் படுத்தியெடுக்கிறது. கத்திரி வெயிலில் வியர்க்குரு தொடங்கி அம்மைநோய் வரை சரும வறட்சி மாதிரியான பாதிப்புகளும் சேர்ந்துகொண்டு அச்சுறுத்த ஆரம்பித்திருக்கின்றன.

கோடையில் சருமத்தில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய சருமப் பிரச்சனைகள் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் மூலமாகவும், சரும சுருக்கங்கள், வித்தியாசமான சரும நிறம், சருமம் தடிமனாக இருப்பது, சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்று பல உருவாகின்றன. எனவே இத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமலிருக்க எப்படி எதிர்கொள்வது?

அரிப்புக்கள் அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வையின் காரணமாக சருமத்தில் அரிப்புக்கள் ஆங்காங்கு அரிப்புக்கள் ஏற்படும். அதிலும் இத்தகைய சரும அரிப்புக்களானது சிறு கொப்புளம் போன்று, பிங்க் நிறத்தில் உடலில் ஆங்காங்கு காணப்படும். எனவே சருமத்தில் ஏற்படும் எரிப்புக்களை தவிர்க்க, குளிர்ச்சியைத் தரும், மேலும் தினமும் இரண்டு முறை காலையில் குளிக்க வேண்டும், கோடையில் உடல் நீரிழப்பு தன்மை அடைகிறது, ஆதலால் நாம் தினமும் 4 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் காட்டன் உள்ளடைகளை பயன்படுத்த வேண்டும்.

சூரியனின் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் தொடர்ந்து படுவதால், அவை சரும செல்களை பாதித்து, சருமத்தில் எரிச்சலை உண்டாக்கிவிடும். சருமத்திற்கு மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்த வேண்டும், அல்லது குடை பிடித்து செல்லலாம் இதனால் சரும எரிச்சல் குறையும்.அதிகமாக வியர்ப்பதால், சருமத்தில் எண்ணெயானது அதிகப்படியாக இருந்து, சருமத்தில் பருக்களை உண்டாக்கிவிடுகின்றன.

சில சமயங்களில் அந்த பருக்கள் கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே தினமும் 3 முதல் 4 முறை முகத்தை குளிர்ந்த நீரில் கழுவது நல்லது மேலும் தர்பூசணி ஜூஸ், மூலம்பழம் ஜூஸ், இளநீர், மோர் எடுத்துக்கொள்வது நல்லது. இது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து பருகள் வராமல் தவிர்க்கும். இயற்கை மருத்துவத்தின்படி முகத்திற்கு பப்பாளி பேக்/குகம்பர் பேக்/மட் பேக்/கற்றாழை பேக் தினம் ஒன்று போட உடலில் உள்ள வெப்பம் குறைந்து முகப்பரு குறையும்.

கோடை காலத்தில் முகத்துக்கும் உடலுக்கும் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள் ஆகியவற்றை அரைத்து பூசலாம்.அதிகமான வெப்பக்காற்று சருமத்தில் படுவதாலும், வறட்சி ஏற்படும். எனவே அத்தகைய வறட்சியைப் போக்க, அடிக்கடி தண்ணீரைப் பருக வேண்டும். பழங்கஞ்சி எனப்படும் நீராகாரம் அடிக்கடி எடுத்துக்கொள்வதும் நன்று. இதனால் உடல் மற்றும் சரும வறட்சியைத் தவிர்க்கலாம்.

பாதங்களுக்கு ஷூ போடுவதால், பாதஙங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, அந்த வியர்வை பாதங்களில் ஒருவித தீமையை உண்டாக்குவதோடு, கால்விரல் நகங்களில் அழுக்குகள் படிவதால், வியர்வையின் காரணமாக கடுமையான வலி ஏற்படும். எனவே எப்போதும் கால்களை சரியாக பராமரித்து வர தினமும் இரவில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து காலை மசாஜ் செய்யலாம். கற்றாழை ஜெல் அல்லது க்ரீம் பூசலாம். வாரத்தில் ஒரு நாள் வெதுவெதுப்பான நீரில் கல்லுப்பு போட்டு கால்களை பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்துக்
கழுவலாம்.

உள்ளாடை அணியும் இடங்களில் அரிப்பு பொதுவாக கோடையில் ஏற்படும். மடிப்புக்கள் மற்றும் இறுக்கமான உடை அணியும் இடங்களில் அரிப்புகள் ஏற்படும். அதிலும் உள்ளாடை அணியும் இடங்களில் கடுமையான அரிப்புக்கள் சிலருக்கு ஏற்படும். எனவே கோடையில் அத்தகைய அரிப்புக்களை தவிர்க்க, நல்ல லூசான ஆடைகளை அணிவதோடு, காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. பெண்கள் லெக்கிங்ஸ், ஜீன்ஸ், பாலியெஸ்டர், நைலான், ஷிபான் போன்ற ஆடை வகைகளைத் தவிர்ப்பது சருமத்துக்கு நல்லது.

தொடை மற்றும் பிறப்பு உறுப்புகளில் வியர்வையால் நோய்த்தொற்று ஏற்பட்டு அரிப்பு மற்றும் தடிப்புகள் ரேசஸ் ஏற்படும். இதற்கு இரவில் தேங்காய் எண்ணெய்
தேய்ப்பது நலல் பலன் தரும்.நன்னாரி வேரை நூறு மி.லி தண்ணீரில் ஊறவைத்துக் கொதிக்கவைத்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். அஜீரணக் கோளாறு கட்டுக்குள் வரும். ரத்தம் சுத்தமாகும்.

மோரில் 90% தண்ணீர் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட் உள்ளதால் உடலில் உள்ள நீர்ச்சத்தை சிறப்பாகப் பராமரிக்கிறது. நீரிழப்பை தடுக்கிறது.தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றை தினமும் சீரான இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளலாம்.கோடைக்காலம் என்றால் வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)
Next post மஞ்சள் முகமே வருக…!! (மகளிர் பக்கம்)