இளநரையை போக்கும் எளிய வழிகள்!! (மருத்துவம்)
*இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை தலையில் தேய்த்து வர முடி செழித்து வளரும்.
*அவுரி இலை அல்லது அவுரி பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கலாம்.
*நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் கருப்பாக மாறும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்து வர இளநரை மற்றும் முடி உதிர்தல் தடுக்கப்படும்.
*இளநரை முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கு வெங்காயச் சாறு பெரிதும் உதவுகிறது.
*கருமையான மற்றும் பளபளப்பான முடியை பெற தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்துவர விரைவில் இளநரை மாறும்.
*வேகவைத்த கொய்யா இலை தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து வர இளநரையை தடுக்கலாம்.
*முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
*அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும். இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும்.
*தண்ணீரில் உலர்ந்த நெல்லிக்காயை இரவு ஊறவைத்து, அந்தத்தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை அரைத்து, காய்ச்சி தினமும் தேய்த்து வர இளநரை மறையும்.
*கறிவேப்பிலையை நன்றாக அரைத்து தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் இளநரையைப் போக்கலாம்.
*நரைமுடி கருப்பாக மாற முளைக்கீரை உதவும். எனவே முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
*செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும், இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.