மாம்பழமா மாம்பழம்!! (மருத்துவம்)
கோடைகாலம் துவங்கிவிட்டாலே மாம்பழ சீசன் வந்திடும். பங்கனப்பள்ளி, ருமானியா, அல்போன்சா என பல வகை மாம்பழங்களை இந்த காலத்தில் நாம் சுவைக்கலாம். தித்திப்பாக இருக்கும் இந்த மாம்பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
* மாம்பழத்தில் மற்றவற்றை விட அதிகமான வைட்டமின் A சத்து அடங்கியுள்ளது. இச்சத்து ரத்தத்தை சுத்தம் செய்யவும் உடலுக்கு நல்ல வலுவை தரவும் நோய் தடுப்பாகவும் உதவுகிறது.
* மாம்பழத்தில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ் முதலிய சத்துக்களோடு வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும் அடங்கி இருக்கின்றன.
* மாம்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இதை உண்பதால் உயர் ரத்த அழுத்தம் சீராகும். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
* மாம்பழம் சாப்பிட நரம்பு தளர்ச்சியை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நல்ல கனிந்த மாம்பழத்தை சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சீராகும். மாம்பழம் ஈறுகளுக்கு நன்மை பயக்கிறது. சிறுநீரகக்கற்களை கரைக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
* மாம்பழம் சாப்பிட எலும்புகளை பலப்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
*தோல் பளபளப்பிற்கும், முடி வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.
* மாம்பழத்திலுள்ள பருப்பு எனப்படும் கொட்டையும் மருந்தாக பயன்படுகிறது. இதை சுட்டு சாப்பிட்டால் வேர்க்கடலை போல சுவையாக இருக்கும். கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இதை மருந்தாக பயன்படுத்தலாம்.
* சதைப்பற்றுள்ள நல்ல மாம்பழத்தை வாங்கி காலை, மாலை, இரவு மூன்று ேவளைகளிலும் உணவு உண்ட பின்னர் பழத்தை சாப்பிட்டு பாலையும் தேனையும் கலந்து பருகி வந்தால் விரைவில் ரத்தம் உருவாகி உடலுக்கு நல்ல பலத்தையும் கொடுக்கும்.
* மலச்சிக்கல் இருந்தால் மாம்பழத்தை தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
* மாம்பழம் கார்போ ஹைட்ரேட் அதாவது மாவுச் சத்து அதிகமுள்ளது. இதை நீரிழிவுக்காரர்கள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகும். இதை மிகக் குறைந்த அளவே உண்ண வேண்டும்.
* மாந்தளிர்களை சிறிதளவு எடுத்து அதை நிழலில் காய வைத்து நன்றாக பொடித்து பாட்டிலில் வைத்துக் கொண்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு பொடியைப் போட்டு பருகினால் நீரிழிவு கட்டுப்படும்.