வேப்பம்பூ பச்சடி!! (மகளிர் பக்கம்)
Read Time:58 Second
தேவையானவை:
வேப்பம்பூ – 2 ஸ்பூன்,
புளி கரைசல் – ½ கப்,
வெல்லத்தூள் – ¼ கப்,
பச்சைமிளகாய் – 4,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கடுகு – ½ ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ½ ஸ்பூன்,
மஞ்சள்
பொடி – ½ ஸ்பூன்.
செய்முறை:
முதலில் புளிக்கரைசலில் வெல்லத்தூள், மஞ்சள் தூள் ேசர்த்துக் கொதிக்க விடவும். உப்பு சேர்த்து இறக்கவும். மிளகாய், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வேப்பம்பூவையும் சேர்த்து வதக்கிப் போட்டு 1 கொதிவிட்டு இறக்கவும். பச்சடி நீர்த்திருந்தால் சிறிது அரிசி மாவு கரைத்து விட்டு 1 கொதி விட்டு இறக்கவும்.