கற்பூரவள்ளி சட்னி!! (மருத்துவம்)
தேவையானவை
கற்பூரவள்ளி இலை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2-3
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 10-15
கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் 1-2
செய்முறை
முதலில் கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். இப்போது கடாயை சூடாக்கி அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக கொத்தமல்லி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை சேர்க்கவும். இலைகள் சுருங்கி வரும் வரை வதக்க வேண்டும். வதக்கிய கலவை ஆறிய பிறகு தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தண்ணீரை சேர்த்து அரைக்கவும். இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஏற்றி கடுகு கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். தாளிப்பை சட்னியுடன் சேர்த்து நன்கு கலக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும். பல மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கற்பூரவள்ளி சட்னியை நீங்களும் செய்து ருசித்து மகிழுங்கள்.